தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/ குடும்பத்திற்குள் ஒழுக்கத்தை விதைக்கும் 'தினமலர்'

குடும்பத்திற்குள் ஒழுக்கத்தை விதைக்கும் 'தினமலர்'

குடும்பத்திற்குள் ஒழுக்கத்தை விதைக்கும் 'தினமலர்'


PUBLISHED ON : ஏப் 24, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 24, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்றத்தூர் லிட்டில் பிளவர் போன்ற பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டம் என்பது வெறும் சடங்கல்ல; அது ஒரு அறிவுத் திருவிழா. அன்றைய வழிபாட்டில், 'தினமும் திருக்குறள்' மற்றும் 'செவ்வாய் தமிழில் செய்திகள்' என்பது மிக முக்கியமானவை.

ஒரு செவ்வாய்க்கிழமை காலை, மாணவர்கள் செய்திகளை வாசித்த விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது:

* அரசுத் தேர்வில் லிட்டில் பிளவர் பள்ளி மாணவர்கள் 'நச்'!

* இனிமேல் லேட்டாக வரும் மாணவர்களுக்கு 'பளீர்' - சேர்மன் அறிவிப்பு!

செய்தி வாசித்த மாணவர்களிடம் இது போன்ற வார்த்தைகளை எங்கு கற்றீர்கள் என்று கேட்டபோது, “எங்கள் வீட்டில் நாங்கள் தினமலர் படிக்கிறோம்,” என்று மிகச் சாதாரணமாகக் கூறினார்கள். இன்றைய காலத்தில் பாடப் புத்தகங்களைப் படிக்க வைப்பதே பெரும் சவாலாக இருக்கும் சூழலில், ஒரு செய்தித்தாள் மாணவர்களின் ஆழ்மனதில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது ஆச்சரியமான உண்மை.

கல்வியாளர்கள் ஒரு மாணவனின் ஒழுக்கத்தையும் ஆர்வத்தையும் அளவிடப் பயன்படுத்தும் முக்கிய அளவுகோல் - அவனுக்கு பத்திரிகை வாசிக்கும் பழக்கம் இருக்கிறதா என்பதுதான். அந்தப் பழக்கம் ஒருவனிடம் இருக்குமானால், அவன் சமூகப் பொறுப்புள்ள சிறந்த மாணவனாகத் திகழ்வான் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில், தினமலர் எண்ணற்ற நல்ல மாணவர்களை செதுக்கி வருகிறது.

ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கும். அனைவரையும் திருப்திப்படுத்தும் ஒரு பத்திரிகை கிடைப்பது மிக அரிது. ஆனால், அந்த இடத்தை தினமலர் மிகச் சரியாக நிரப்புகிறது.

* ஆன்மிகப் பசிக்கு: ஆன்மிக மலர்

* குழந்தைகளின் கற்பனைக்கு: சிறுவர் மலர் மற்றும் பட்டம்

* தகவல் களஞ்சியமாக: வாரமலர் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள்

அரசியல், சினிமா, பொருளாதாரம், சுற்றுச்சூழல் என அனைத்துத் தரவுகளையும் உள்ளடக்கிய தினமலர், ஒரு குடும்பத்தின் தேவைகளை தினமும் நிறைவேற்றும் ஒரு பொக்கிஷம்.

மாணவர்களிடம் உரையாட, பெற்றோருக்கு ஆலோசனை வழங்க, மேடைப் பேச்சுகளைத் தயார் செய்ய என ஒவ்வொரு நிலையிலும் கல்வியாளர்களுக்கு தினமலர் உற்ற துணையாக இருக்கிறது. குறிப்பாக, தினமலர் - பட்டம் இதழ் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டுவதில் ஒரு மாபெரும் புரட்சியை செய்திருக்கிறது.

ஞாயிறுதோறும் வெளியாகும் வாரமலரில் வரும் எட்டு வித்தியாசங்கள் மற்றும் வார்த்தை விளையாட்டுகளை கண்டுபிடிப்பதில், எனது 89 வயது தந்தைக்கும் 83 வயது தாய்க்கும் எங்களுக்கும் இடையே நடக்கும் போட்டிகள் ரசிப்புக்குரியவை. வாசிப்பைத் தாண்டி, ஒரு குடும்பத்திற்குள் நாகரிகத்தையும் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் தினமலர் விதைக்கிறது.

ஒரு நற்பணி, தலைமுறை தாண்டி நீடிக்கிறது என்றால், அது அந்தச் சமுதாயத்தின் ஆசிர்வாதம். உலகம் டிஜிட்டல் மயமாகி வரும் இந்தக் காலத்திலும், 75 ஆண்டுகளாக தொய்வின்றி சமுதாயத்தில் அறிவுப் புரட்சி செய்து வருவது ஒரு பெரும் சாதனை.

தினமலருக்கு வாழ்த்துகள்.

அடுத்தடுத்த இதழ்களுக்காக குடும்பத்தோடு தினமும் காத்திருக்கிறோம்.

தினமலரின் மணம் இல்லம்தோறும் தினமும் வீசட்டும்!

எம்ஜேஎப் லயன் ஜான் சேவியர் தங்கராஜ்

தலைவர்

லிட்டில் பிளவர் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ்

குன்றத்தூர், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us