PUBLISHED ON : ஜன 14, 2026 12:59 AM

'தினமலர்' கண்ணியமான நாளிதழ். அதில் நாகரிகமான சொற்களே இடம்பெற்றிருக்கும். நாட்டின் அன்றாட நிகழ்வுகளை மிகைப்படுத்தாமல், இயல்பாக செய்திகளை வெளியிடுவதில் தினமலர் சிறப்பாக சேவையாற்றி வருகின்றது.
இளைய தலைமுறையின் கல்விக்கு, தினமலர் ஆற்றிவரும் சேவை அளப்பரியது, மிகவும் பாராட்டத்தக்கது.
இந்த நாளிதழ், மாணவர்களுக்காக வினா-விடை, ஜெயித்து காட்டுவோம், வழிகாட்டி, உங்களால் முடியும் போன்ற கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை பல்லாண்டுகளாக வெற்றிகரமாக நடத்திவருகின்றது. இதற்கு விதை போட்டது தினமலரின் முன்னாள் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
தினமலர் நாளிதழில் குறிப்பிடத்தக்க அம்சம் 'டீக்கடை பெஞ்ச்'. இந்தப் பகுதியில் அலசப்பாடாத விஷயங்களே கிடையாது. உள்ளூர் செய்திகள் முதல் அரசியல் நடப்புகள் வரை பல்வேறு விஷயங்கள் அலசப்படுகின்றன.
நாளைய தமிழகத்தில் ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்த மாணவச் செல்வங்கள் நிறைய பேர் உருவாகியிருக்கின்றார்கள் என்றால் அதற்கு தினமலர் நாளிதழ் ஒரு முக்கிய காரணமாகும். தினமலர் நாளிதழ் தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்கு பணியாற்றி நூற்றாண்டு விழா காண வேண்டும் என்று அன்புடன் வாழ்த்துகின்றேன்.
டாக்டர் ஏ.சி.சண்முகம்
நிறுவனர் தலைவர், புதிய நீதிக்கட்சி மற்றும் வேந்தர், டாக்டர். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்

