PUBLISHED ON : மார் 11, 2026 01:42 AM

உண்மை செய்திகளுடன் ஆன்மிகத்தை போற்றும் 'தினமலர்', மக்கள் வாழ்வில் ஒளி ஏற்ற மனமார்ந்த வாழ்த்துகள்!
தினமலர் நாளிதழ், தனது 75 ஆண்டு கால சேவையை நிறைவு செய்து, வைர விழாவை நோக்கி பயணிக்கும் இந்த இனிய தருணத்தில், என் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு ஊடகம், செய்திகளை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், மனித மனங்களை செம்மைப்படுத்தி, அறம், உண்மை, ஆன்மிகம் ஆகியவற்றை சமுதாயத்தில் விதைக்க வேண்டும். அந்த வகையில், 'தினமலர்' தனது ஆன்மிக செய்திகள் மற்றும் தொடர்கள் மூலம் சமூகத்துக்கு ஆற்றி வரும் சேவையை மனமாறப் பாராட்டுகிறேன்.
ஆன்மிகம் என்பது கோவில்களில் மட்டும் இருப்பதல்ல; அது மனிதனின் தினசரி வாழ்வை ஒழுங்குபடுத்தும் ஒரு வாழ்வியல் நெறி. அந்த உண்மையை, தினமலர், தனது ஆன்மிக செய்திகள் மூலம் அழகாக எடுத்துரைக்கிறது.
ஆன்மிக சிந்தனை, ஸ்தல வரலாறு, விரத மகிமை, சித்தர்களின் வாழ்க்கை போன்றவை வாசகர்களின் மனதில் நம்பிக்கையையும் அமைதியையும் ஏற்படுத்துகின்றன.
உண்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஆன்மிக செய்திகள் வெளியிடுவது, தினமலரின் தனித்துவமான பெருமையாகும்.
இன்றைய வேகமான உலகில், மனிதன் மன அமைதியை இழந்து நிற்கும் வேளையில், ஆன்மிகமே ஒரு மனிதனுக்கான அரண். அந்த அரணாக, தினமலர், 75 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்துள்ளது. உண்மை செய்திகளுடன் ஆன்மிகத்தையும் போற்றும் இந்த சேவை, சமுதாயத்துக்கு கிடைத்த ஒரு பெரும் வரமாகும்.
இத்தகைய ஆன்மிக ஊடகப் பணி மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து, இன்னும் பலரின் வாழ்வில் ஒளி ஏற்ற எனது மனமார்ந்த வாழ்த்துகளும், ஆசீர்வாதங்களும்.
எஸ்.பி.அன்பரசன் தலைவர், நல்லறம் அறக்கட்டளை
