தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/ தமிழுக்கான குரலாக ஒலிக்கிறது 'தினமலர்'

தமிழுக்கான குரலாக ஒலிக்கிறது 'தினமலர்'

தமிழுக்கான குரலாக ஒலிக்கிறது 'தினமலர்'


PUBLISHED ON : ஏப் 28, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 28, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ், தனது 75ம் ஆண்டை கொண்டாடி வருவது, உள்ளபடி எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் பத்திரிகை உலகில், 75 ஆண்டுகளை, ஒரு பத்திரிகை தொடுவது, மிகப்பெரிய சாதனை. அதன் பின்னால், தினமலரின் அயராத உழைப்பும், அதன் வாசகர்களின் பங்களிப்பும் உள்ளது. பத்திரிகைகள், ஜனநாயகத்தின் துாண் என்பது, வெறும் பேச்சு மட்டும் அல்ல. நமது நாட்டின் கருத்து சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம் நிலை பெறுவதற்கும் நீடிப்பதற்கும் பத்திரிகையின் பங்களிப்பு மகத்தானது. அந்த வகையில், கருத்து சுதந்திரம் மகத்துவம் பெறுவதில், தினமலரின் பங்களிப்பு மிக முக்கியமானது.

மனித குலத்தின் மகத்தான பிரகடனங்கள், வார்த்தைகளால் மட்டுமல்ல; எழுத்துக்களாலும் பிறந்ததுதான். ரூசோ, வால்டர் ஆகியோரின், மனித உரிமை பிரகடனங்கள், மார்க்ஸ், ஏங்கல்ஸ், கம்யூனிஸ்ட் அறிக்கை, மகாத்மா காந்தியின் அகிம்சை முறைகள், டாக்டர் அம்பேத்கரின் ஆய்வு கட்டுரைகள், ஈ.வே.ராமசாமியின் பகுத்தறிவு கருத்துக்கள் என, உலகின் தலைசிறந்த கருத்துக்கள் அனைத்தும், பத்திரிகைகள் வழியாகவே, உலகம் பெரிதும் அறிந்தது.

தான் ஏற்றுக் கொண்ட கருத்தில் உறுதியாக இருந்து, தினமலரும் தனது பத்திரிகை வழியே, தனது கருத்துக்களை உலகறிய செய்கிறது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டு, அதனால் மானுடம் பெற்ற பெருந்துயரம், இன, மதக் கலவரங்கள், அரசின் அடக்குமுறைகள், உரிமைக்கான போராட்டங்கள் என அனைத்தையும், தமிழ் உலகம் தெரிந்து கொள்ள, பத்திரிகைகள் உதவின.

பத்திரிகைகள் இல்லையென்றால், ஜனநாயகத்தின் மீது இருள் சூழ்ந்துவிடும். தினமலர், தமிழ் மண்ணில் தனக்கென ஓர் வாசகர் வட்டத்தை கொண்டுள்ளது. தனக்கென தனித்துவமான, ஓர் பத்திரிகை பாணியை கடைப்பிடிக்கிறது. மொழிவாரி மாநில பிரிப்புகளுக்கு, கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும் போராட்டம் நடத்தினர்.

அந்த சமயத்தில், கம்யூனிஸ்ட் இயக்க பணிகளை, தினமலர் நாளிதழ் பதிவு செய்துள்ளது. தென் எல்லை போராட்டம் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளுக்கு, தினமலரின் பங்கு மிக முக்கியமானது. தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என, தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் உறுதியாக இருந்தார். அதன் பொருட்டே, தினமலர் நாளிதழையும் அவர் தொடங்கினார். அதனால், ஏராளமான அடக்குமுறைகளையும் அவர் சந்தித்தார். தமிழுக்கான குரலாக, தினமலர் எப்போதும் ஒலிக்கிறது. தற்போது மொழிவழி மாநிலங்களின் உரிமைகளை, மத்திய அரசு ஒடுக்கி வருகிறது. அதற்கு எதிராக தினமலர் மீண்டும் களமாட வேண்டும்.

அதிகார குவியலுக்கு எதிராக, தினமலரின் சாட்டை எப்போதும் சுழலும். புதிய சமூக சிந்தனைகளுக்கு, தினமலர் உரிய பங்களிப்பை செய்திட வேண்டும்; நிச்சயம் செய்யும். பத்திரிகைகளுக்கு செய்தி மட்டுமல்ல; சமரசமற்ற நீதி தான் இலக்காக இருக்க முடியும். அத்தகைய பயணத்தில், தினமலர் வெற்றி பெற வேண்டும். அதற்காக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.



மு.வீரபாண்டியன்

மாநில செயலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us