தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/கல்வி செய்திகளில் முன்னிலை வகிக்கிறது 'தினமலர்'

கல்வி செய்திகளில் முன்னிலை வகிக்கிறது 'தினமலர்'

கல்வி செய்திகளில் முன்னிலை வகிக்கிறது 'தினமலர்'


PUBLISHED ON : டிச 17, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்?

இந்த பாரிடை துயற்வோர் தன்னில் பாய்ச்சிடும் எழுச்சி நீ தான்

ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்கும்

பேரறி வாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிக்கை பெண்ணே!”

என்னும் பாரதிதாசன் வரிகளை முன்னிருத்தி; தினமலர் நாளிதழின் பல லட்சக்கணக்கான வாசகர்களில், கல்வியாளரான ஜெயபிரகாஷ் காந்தியாகிய நானும் ஒருவன் என்பதிலும், கடந்த 25 ஆண்டுகளாக தினமும் தினமலர் ரசிகனாக இருந்து, படித்து பயன்பெற்று வருபவன் என்ற முறையிலும் பெருமிதம் கொள்கிறேன்.

ஆரம்ப காலம் தொட்டு, இன்றைய நாள் வரை ஒரு தரமான நாளிதழாக தினமலர் விளங்கி வருகிறது. கல்வி கடமையில் அதிகமான நாளிதழ்கள் இருந்தாலும், அதில் மாணவர்களுக்கு சாதகமாக, நடுநிலையான கருத்து வெளிப்பாடுகளும், மிகைப்பாடு இல்லாத உண்மையான கல்வி செய்திகளையும் வெளியிடுவது தினமலர். அரசியல் நோக்கமின்றி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வெளியிடும் தினமலரில், கல்வி சார்ந்த விளம்பரங்களும் தரமானவை.

நாளிதழில் வெளியாகும் கல்வி செய்திகள் தவிர, தனது 'கல்வி மலர்' இணையதளம் வாயிலாக ஆங்கிலம் மற்றும் தமிழ் கல்வி சார்ந்த செய்திகளை வெளியிடுவதால் கல்வி செய்திகளில் முன்னிலையில் இருப்பது தினமலர் என்பதில், எந்த ஐயமுமில்லை.

+2 தேர்வு, பொறியியல், நீட், ஐ.ஏ.எஸ்., என பல பாடங்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகளை நடத்துவது மட்டுமல்லாமல், குழந்தைகளின் ஆற்றலை வெளிப்படுத்த வினாடி வினா, செஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் தினமலர் நடத்தி வருவது அதன் தனித்துவ சிறப்பாகும்.

முக்கிய பண்டிகை மற்றும் தேசிய விடுமுறை நாட்களிலும் கூட, விடுமுறையை கணக்கில் கொள்ளாமல் வாசகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தினமலர் நாளிதழை வெளியிடுவது அதன் அயராத உழைப்புக்கு உதாரணம். இந்த ஆற்றல்மிகு சாதனைகள் அனைத்தும், தினமலர் நிர்வாகத்தினரின் தனித்துவ திறமைகளால் தொடர்ந்து கொண்டே இருக்கும். தினமலர் இதழின் தனித்துவ் செயல்பாடுகள் என்றென்றும் நிலையான புகழும் பெருமையும் உடையதாக வளர என் மனமார்ந்த வாழ்த்துகள். பத்திரிகை தொழிலில் சிறப்பாக செயல்பட்டு, 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் தினமலர் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர் அனைவரையும் இந்த நல்ல தருணத்தில் பாரட்டுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடத்தமைக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

- ஜெயபிரகாஷ் காந்தி

கல்வியாளர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us