sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தினமலர் பவள விழா

/

வெற்றிக்கு திசைகாட்டும் தினமலர் நாளிதழ்!

/

வெற்றிக்கு திசைகாட்டும் தினமலர் நாளிதழ்!

வெற்றிக்கு திசைகாட்டும் தினமலர் நாளிதழ்!

வெற்றிக்கு திசைகாட்டும் தினமலர் நாளிதழ்!


PUBLISHED ON : டிச 03, 2025 08:22 AM

Google News

PUBLISHED ON : டிச 03, 2025 08:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த 1951ல் திருவனந்தபுரத்தில் துவங்கப்பட்ட 'தினமலர்' நாளிதழ் 75வது ஆண்டை எட்டிப்பிடித்திருப்பது, தமிழர்களுக்கு மிக்க மகிழ்ச்சி தரும் முக்கிய செய்தியாகும்.

செய்தகளை முந்தித் தருவதும், ஒவ்வொரு மாவட்டத்தின் செய்திகளையும் தனித்தனியாக பிரித்து தருவதும், அதிகமான தெளிவான வண்ணப் படங்களுடன் செய்திகளை மிக எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் தருவதம், தினமலரின் தனிச் சிறப்பு.

சிறுவர் மலர், ஆன்மிக மலர் மற்றும் வாரமலர் என, மூன்று இலவச இணைப்புகளை தமிழக செய்தித்தாள் வரலாற்றில் முதன்முதலில் அரங்கேற்றியதும் 'தினமலர்' தான். தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியர் அரசு பொது தேர்வை சிறப்பாக எதிர்நோக்கும் வண்ணம் அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு 'ஜெயித்து காட்டுவோம்' என்ற வழிகாட்டும் நிகழ்ச்சியை நடத்தி பெருமை கொண்டதும் 'தினமலர்' நாளிதழ்.

இதய தெய்வங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியின் சிறப்புகள் குறித்து தங்கள் 'தினமலர்' நாளிதழ்களில் செய்திகளால் பட்டி தொட்டிகளிலும் பரவ செய்தது சிறப்புக்குரியதாகும்.

அரசியல், பொருளாதாரம், சினிமா போன்ற செய்திகளுடன் கல்வி, வேளாண்மை, மருத்துவம், சுகாதாரம், போட்டி தேர்வுகளுக்கான மாதிரி வினா - விடைகள் என எல்லா தளங்களிலும் தன் முத்திரையை பதித்த முதல் நாளிதழ், 'தினமலர்' எனில் அது மிகையாகாது.

நுாற்றாண்டுகளை கடந்தும், 'தினமலர்' நாளிதழ் சிறப்பாக வெளி வந்து தமிழ் மொழியும், தமிழகமும் உயர்வதற்கு உதவ வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.

கே.ஏ.செங்கோட்டையன்

சட்டசபை உறுப்பினர், கோபிசெட்டிபாளையம் - ஈரோடு






      Dinamalar
      Follow us