/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
தனித்துவத்தை கைவிடாமல் செயல்படுகிறது 'தினமலர்'
/
தனித்துவத்தை கைவிடாமல் செயல்படுகிறது 'தினமலர்'
PUBLISHED ON : நவ 24, 2025 11:23 AM

அறிவியல் வளர்ச்சியில் மின்னணு ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் தற்காலத்திலும் அச்சு ஊடகங்களின் மேன்மையும், பங்களிப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. இன்றளவும் எளிய மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை பசியறிந்து ஊட்டும் தாய்போல தேவையறிந்து தேவையானவற்றை மட்டும் தரும் ஊடக வடிவங்களாக அச்சு ஊடகங்களே திகழ்கின்றன. அந்த வகையில, 'தினமலர்' நாளிதழ் தன் தனித்துவத்தை கைவிடாமல் சுவைமிகுந்த பல செய்திகளை தமக்கே உரிய பாணியில் மக்களிடம் கொண்டு சேர்த்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது.
நாளேடாக மட்டுமின்றி, சமூக வலைதளத்திலும், இணையத்திலும், காட்சி ஊடகமாகவும் பரந்து, தன் இதழ் சிறகினை விரித்துள்ள 'தினமலர்' நாளிதழ், மென்மேலும் வளர்ந்திட பவள விழா ஆண்டில் வாழ்த்துகிறேன்!
நாட்டு நடப்புகளை தெளிவுபடுத்தி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதே வேளையில், மக்களின் குறைகளை அரசிடமும், ஆட்சியாளர்களின் குற்றங்களை எடுத்துக் கூறி மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக செயல்படும் பெரும்பணியை தொடர்ந்து புரிந்திட 'தினமலர்' நாளிதழுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்!
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

