/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
எங்கள் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்றியது 'தினமலர்'
/
எங்கள் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்றியது 'தினமலர்'
எங்கள் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்றியது 'தினமலர்'
எங்கள் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்றியது 'தினமலர்'
PUBLISHED ON : நவ 21, 2025 08:17 AM

'தினமலர்' தனது 75ஆம் ஆண்டு பவள விழாவை கொண்டாடி வரும் இந்த சிறப்பான தருணத்தில், என்.ஏ.சி., ஜூவல்லர்ஸ் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் கல்லூரி நாட்களிலிருந்தே நான் 'தினமலர்' நாளிதழை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அதன் செய்திகள் மற்றும் கட்டுரைகள் எப்போதும் உண்மைத்தன்மை, நியாயம், நம்பகத்தன்மை ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இந்த பண்புகளே 'தினமலர்' நாளிதழுக்கு வாசகர்களின் மனங்களில் சிறப்பான இடத்தை வழங்கியுள்ளன.
என்.ஏ.சி., ஜூவல்லர்ஸ் நிறுவனம் தனது ஆரம்பகாலத்திலிருந்தே தினமலர் நாளிதழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. விளம்பர தளமாக தினமலரை தேர்ந்தெடுத்தது எங்கள் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்றியது.
என்.ஏ.சி. ஜூவல்லர்ஸ் இன்று அடைந்துள்ள உயர்வுக்கு தினமலரின் பங்களிப்பு சிறப்பானதாகும் என்று பெருமையாக கூறுகிறேன்.
'தினமலர்' தனது பவளவிழா பயணத்தை தொடர்ந்து, உண்மை மற்றும் நேர்மையுடன் பத்திரிகைத் துறையில் புதிய சாதனைகளை நிகழ்த்தி, மேலும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக திகழ வாழ்த்துகிறேன்.
என். அனந்த பத்மநாபன்
சேர்மன், என்.ஏ.சி. ஜூவல்லர்ஸ்

