தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/ செய்திகளை போல் விளம்பரங்களையும் தேர்வு செய்கிறது 'தினமலர்'

செய்திகளை போல் விளம்பரங்களையும் தேர்வு செய்கிறது 'தினமலர்'

செய்திகளை போல் விளம்பரங்களையும் தேர்வு செய்கிறது 'தினமலர்'


PUBLISHED ON : மே 02, 2026 12:28 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 02, 2026 12:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விளம்பரதாரருக்கும் சரி, வாசகருக்கும் சரி, தினமலரில் வெளியாகும் விளம்பரத்திற்கு பலன் நிச்சயம் உண்டு. கொடுத்த பணத்தின் மதிப்பிற்கான உத்தரவாதம் உண்டு.

பெரிய 'பிராண்ட்'களால் தான் தினமலரில் விளம்பரம் செய்ய முடியும் என்பதில்லை. சிறிய நிறுவனங்களுக்கு தனி 'பேக்கேஜ்' கொடுத்து, அவற்றின் வியாபார வெற்றிக்கு அடித்தளம் வகுத்து கொடுக்கிறது 'தினமலர்'.

கல்வி, வாகனம், மருத்துவம், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் உள்ள நிறுவனங்கள், தினமலர் தங்களுக்கு தேவையான 'ரீச்' கொடுப்பதாக கருதுகின்றனர். கல்வி நிறுவன விளம்பரங்களை எடுத்துக்காட்டாக கருதினால், கல்வி சம்பந்தமாக, பல்வேறு தலைப்புகளில், கல்வி மலர் உள்ளிட்ட பகுதிகளில் தினமலர் கொடுக்கும் எண்ணற்ற கட்டுரைகள், அந்த கல்வி விளம்பரங்களின் மதிப்பை கூட்டி, அவற்றை ஜொலிக்கச் செய்கின்றன. மாணவர்களை ஈர்க்கும் அந்த கட்டுரைகள், அவர்கள் கவனத்தை விளம்பரங்கள் பக்கமும் திருப்புகிறது. இது கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கிறது.

மிக முக்கியமாக, வரும் அனைத்து கல்வி விளம்பரங்களையும் தினமலர் வெளியிடுவதில்லை. செய்திகளை போல், விளம்பரங்களை தேர்வு செய்கிறார்கள். அதற்கு, அறம் சார்ந்த ஒரு நெறிமுறை வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், வாசகர்களின் நம்பிக்கைக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்கும் முன்னுரிமை தருகிறது தினமலர்.

பணத்திற்கும், பிற அழுத்தங்களுக்கும் தங்கள் தொழில் கொள்கைகளை விட்டுக் கொடுப்பதில்லை. லாபத்திற்காக எந்த ஒரு விளம்பரத்தையும் அப்படியே வெளியிடுவதில்லை. விளம்பரங்கள், சமூகத்திற்கும் இளம் தலைமையினருக்கு ஏற்றதா என்று கேட்கிறார்கள். தவறான தகவலை கொண்டு சேர்த்து விடக்கூடாது என்பதில் முழு கவனத்தோடு செயல்படுகிறது தினமலர்.

அதே போல், அரசு விளம்பரங்களை பாதிக்கும் என்றாலும் கூட, சிறு தொழில் முனைவோரின் எதிர்பார்ப்புகளையும் குறைகளையும் செய்திகளாக வெளியிட்டு, அவர்களின் வளர்ச்சிக்கு சிறந்த அடித்தளமாக தினமலர் விளங்குகிறது.

அதனால் தான், எவ்வளவோ புது ஊடகங்கள் வந்தாலும், நம்பகத்தன்மை என்ற ஒரே ஒரு அஸ்திரத்தை பயன்படுத்தி, வாசகர் மத்தியில் மட்டுமல்ல விளம்பரதாரர் மத்தியிலும் நிலையாக நிற்கிறது தினமலர்.

இன்ஸ்டாகிராம் பார்த்தாலும், கூகுளில் தேடி விவரம் தெரிந்து கொண்டாலும், இன்ப்ளுயன்ஸர்கள் மாறி மாறி பேசினாலும், நாளிதழ்களை பார்த்து உறுதி செய்த பின்னரே சில பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம், நம்பகதன்மை.

முக்கிய செய்திகள், நிகழ்வுகள், பண்டிகைகள் குறித்து அவ்வப்போது வாசகர்களை அணுகி, அவர்களது கருத்துக்களை கேட்டு அறிந்து வெளியிடுவது தினமலரின் சிறப்பான அம்சம். இது நம்ம பேப்பர் என்பதில் பெருமை கொள்ள வைக்கிறது. உள்ளூர் வாழ்க்கையோடு கலந்த ஊடகம் தினமலர்.

இரா.சுவாமிநாதன்

நிறுவன அறங்காவலர், சசி கிரியேட்டிவ் கல்லுாரிகள் மற்றும் நிறுவன இயக்குனர், சசி அட்வர்டைசிங் பிரைவேட் லிமிடெட்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us