தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/ நாளைய உலகை வடிவமைக்கும் 'தினமலர்'

நாளைய உலகை வடிவமைக்கும் 'தினமலர்'

நாளைய உலகை வடிவமைக்கும் 'தினமலர்'


PUBLISHED ON : ஏப் 15, 2026 12:14 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2026 12:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பத்திரிகை என்பது ஒரு தேசத்தின் கண்ணாடி மட்டுமல்ல; அது அதன் மனசாட்சியை தட்டியெழுப்பும் சவுக்கடி.'

இந்த உயரிய பங்கினை நெஞ்சில் சுமந்து, 'தினமலர்' கடந்த 75 ஆண்டுகளாக சமூகத்தின் உணர்வுகளையும் உண்மைகளையும் பதிவு செய்து வருகிறது.

'உண்மைக்கு எப்போதுமே முதலிடம்' என்ற தாரக மந்திரத்துடன், 1951 செப்., 6 ல் திருவனந்தபுரத்தில் ஐயா டி.வி.ராமசுப்பையரால் தொடங்கிய இந்தப் பயணம், இன்று மாபெரும் மக்கள் இயக்கமாக உயர்ந்துள்ளது. இந்த 75 ஆண்டு பயணம், தமிழக பத்திரிகை வரலாற்றில் ஒரு சிறப்பான மைல்கல்.

தினமலர் ஒரு செய்தித்தாள் மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் நாடி. மக்களின் குரலாக ஒலித்து, அவர்களின் சிக்கல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, உண்மையை முன்னிறுத்தும் பொறுப்புணர்வோடு செயல்படுகிறது. அதனால் தான், அது வாசகர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக மாறியுள்ளது.

தமிழகத்தின் பல நகரங்களை தாண்டி, இந்தியாவின் முக்கிய நகரங்களிலும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடமும் தினமலர் தன் தடத்தைப் பதித்துள்ளது. வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு தாய்நாட்டின் உணர்வையும் செய்திகளையும் இணைக்கும் உறவுப்பாலமாக இது திகழ்கிறது.

தினமலரின் வெற்றியின் மையம், அது பல்வேறு வகையான வாசகர்களை அணைத்துக்கொள்வது தான். ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் தமக்கான செய்தியையும் திசையையும் தினமும் அதில் கண்டடைகிறார்கள்.

தினமலர் எப்போதும் காலத்தோடு பயணித்துள்ளது. அச்சுத் தொழில்நுட்பத்தில் வேகமும் தரமும் இணைந்துள்ளது; டிஜிட்டல் உலகில் மொபைல் செயலி,ஐ பேப்பர், வீடியோ செய்தி போன்ற வடிவங்களில் வாசகர்களை அணைகிறது.

இனி வரும் காலத்தில், ஆகுமென்டட் ரியாலிட்டி மற்றும் வெர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்கள் செய்தி அனுபவத்தை மாற்றவுள்ளன. வெர்ச்சுவல் ரியாலிட்டியில், வாசகர் நேரடியாக அந்த நிகழ்வுக்குள் இருக்கும் உணர்வைப் பெறுவார். உதாரணமாக, ஒரு திருவிழா அல்லது நிகழ்ச்சியை வீட்டிலிருந்தபடியே நேரில் பார்த்த அனுபவம் கிடைக்கும். இதனால், செய்தியை வாசிப்பது என்பது செய்தியை அனுபவிப்பதாக மாறும். இதிலும் தினமலர் முன்னோடியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

தினமலர் தனது அடுத்த கட்ட பயணத்தில்;

• செயற்கை நுண்ணறிவு மூலம் துல்லியமான செய்தி வழங்கல்

• தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் பாதுகாப்பு

• தொழில்நுட்பம் மற்றும் மனித மதிப்புகளின் சமநிலை

என்ற மூன்று தளங்களில் முன்னேறத் திட்டமிட்டுள்ளது.

'தமிழகமும் இந்த நாடும் வளம் பெறும் வரை எங்கள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்' என்ற நிறுவனரின் உறுதி, இன்றும் வழிகாட்டும் விளக்காக உள்ளது.

தினமலர், சமுதாயத்தை சிந்திக்கச் செய்யும் சக்தி. அதிகாரத்திற்கு அஞ்சாமல் உண்மையை உயர்த்தி, சாமானியனின் குரலாக ஒலித்து,

அறிவை விதைத்து விழிப்புணர்வை அறுவடை செய்த இந்த எழுத்துலக பேரரசுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பவள விழா ஆண்டில், அதன் இலட்சியப் பாதையில் பயணிக்கும் ஒவ்வொரு நிர்வாகி, செய்தியாளர், பணியாளருக்கும் எமது மரியாதையும் பாராட்டுகளும்.



முனைவர் எஸ்.விமலா,

முன்னாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us