தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/ பவள ஒளியில் ஒளிரும் 'தினமலர்'

பவள ஒளியில் ஒளிரும் 'தினமலர்'

பவள ஒளியில் ஒளிரும் 'தினமலர்'


PUBLISHED ON : ஏப் 14, 2026 12:13 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 14, 2026 12:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பணிப் பற்று, சமூக பொறுப்பு, நேர்மை, நம்பிக்கை ஆகியவற்றின் தொகுதியே, தினமலரின் 75 ஆண்டு கால வரலாற்று பயணம்.

தமிழ் மொழியின் இனிமையையும், செய்தியின் நம்பகத்தன்மையையும் இணைத்து, பொதுமக்களின் தினசரி வாழ்வின் அங்கமாக திகழ்ந்து வரும் தினமலர், செய்தி என்பதை கடந்த ஒரு சமூகச் சக்தியாக வளர்ந்து உள்ளது. அனை்தது துறைகள் பற்றியும் விழிப்புணர்வை விதைத்து, தலைமுறைகளை உருவாக்கியதன் பெருமை தினமலருக்கே உரியது.

மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கும் கல்வி இணைப்புகள், போட்டித் தேர்வு தகவல்கள், வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவும் கட்டுரைகள், இவை அனைத்தும் எண்ணற்ற குடும்பங்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்துள்ளன.

அதேபோல், சமூக அக்கறையுடன் வெளியிடப்படும் ஆசிரியர் கட்டுரைகள், உண்மையை உறுதியாக வெளிப்படுத்தும் செய்தி தன்மை, பொதுநலனுக்காக குரல் கொடுக்கும் பண்பு, இவை அனைத்தும் தினமலரை ஒரு நம்பிக்கை குரலாக உயர்த்தி உள்ளன.

'சொல் வழி சிந்தனை, சிந்தனை வழி சமூக மாற்றம்' என்ற அடிப்படையில் செயல்பட்டு வரும் தினமலர், காலத்தை வழிநடத்தும் ஒளிக்கோபுரமாக திகழ்கிறது.

இத்தகைய சிறப்பான பணியை தொடர்ந்து செய்து வரும் உங்கள் ஆசிரியர் குழுவிற்கும் நிர்வாகத்திற்கும் என் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தினமலர் நாளிதழ் சமூகத்திற்கு ஒளி பாய்ச்சித் தொடர்ந்து வளர வேண்டும் என இந்த பவள விழா ஆண்டில் மனமார வேண்டுகிறேன்.

டாக்டர் மாதேஸ்வரன்

தலைவர், ராயல் கேர் மருத்துவமனை, கோவை



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us