தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/அறிவுசார் சமூகத்தின் வழிகாட்டி 'தினமலர்'

அறிவுசார் சமூகத்தின் வழிகாட்டி 'தினமலர்'

அறிவுசார் சமூகத்தின் வழிகாட்டி 'தினமலர்'


PUBLISHED ON : மே 16, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்றாட செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை தாண்டி, ஒரு மிகப்பெரிய சமூக பொறுப்பையும் 'தினமலர்' தொடர்ந்து சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக, தமிழ் இதழியல் உலகில் வணிகம், பொருளாதாரம் மற்றும் தொழில் சார்ந்த செய்திகளுக்கான முக்கியத்துவம் குறைந்து வரும் சூழலில், அவற்றுக்கென தனிப்பட்ட பக்கங்களை ஒதுக்கி, ஆழமான பகுப்பாய்வுகள் மற்றும் பயனுள்ள சிறப்பு கட்டுரைகளை வெளியிட்டு வருவது மிகவும் பாராட்டத்தக்கது.

அதேபோல, சிறார்களுக்காக தனி இதழாக வெளிவரும் 'பட்டம்', மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் மற்றும் அறிவுத் தேடலை ஊக்குவித்து, சமூகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கி வருகிறது. மேலும், வரலாற்றை எளிய தமிழில் பொதுமக்களிடம் கொண்டு சென்ற 'சோழர்கள் இன்று' போன்ற நூல்கள், தமிழ் வாசகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்று, அறிவுப் பரப்பை விரிவுபடுத்தியுள்ளன.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, கல்வி, வரலாறு, பொருளாதாரம், தொழில், குழந்தைகள் வளர்ச்சி என பல துறைகளில் அறிவு புரட்சியை ஏற்படுத்தி வரும் ஊடகமாக தினமலர் திகழ்கிறது. நவீன தமிழ் சமூகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவரும் தினமலருக்கு நிகர் எந்த நாளிதழும் இல்லை என்றே உறுதிபட சொல்லலாம்.

இனியும் இதே உற்சாகத்துடனும் சமூக பொறுப்புணர்வுடனும் தினமலர் தனது பயணத்தை தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்க என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஷ்யாம் சேகர்

இணை நிறுவனர், ஐதாட் பி.எம்.எஸ்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us