PUBLISHED ON : மார் 07, 2026 12:16 AM

காலம் மாறினாலும் தன் துவக்க கால கொள்கைகளை உறுதியாக காத்து வந்து, இன்று, பவள விழா காணும் தினமலரை, லலிதா ஜுவல்லரியின் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
துவக்க காலத்தில் இருந்தே, உண்மை, தெளிவு ஆகியவற்றை தன் அடிப்படை சிந்தனையாக அமைத்துக் கொண்டு, 'தினமலர்' தனக்கென ஒரு பெருமதிப்பை உருவாக்கி வந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில், முரண்பட்ட செய்திகளும் கருத்துக்களும் உலவுகின்றன. அவற்றுக்கு இடையில், தினமலர் தன் செய்தியின் தரத்தை இழக்காமல் திகழ்கிறது. ஒழுக்கத்தால் நடத்தப்படும் தினசரி, மக்களிடத்தில் நம்பிக்கையை உருவாக்கி, நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அது நிரூபித்துள்ளது.
மிகப்பெரிய வாசகர் வட்டம், பரவலான செல்வாக்கு ஆகியவை, தினமலர் குழுவின் உழைப்பு மற்றும் மக்கள் சேவை அர்ப்பணிப்பின் விளைவாகும். ஆசிரியர்கள், நிருபர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பணியாளர்கள் என்று ஒவ்வொருவரும் மக்கள் நம்பும் ஒரு நிறுவனத்தை உருவாக்குவதில் தங்கள் பங்கைச் செய்துள்ளனர்.
தொழில்நுட்ப மாற்றத்தையும் தினமலர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. டிஜிட்டல் யுகத்தை ஆரம்பத்திலேயே வரவேற்று, புதிய ஊடகப் போக்குகளுக்கு தன்னை தயார்படுத்தி, பொறுப்பான பத்திரிகையின் உண்மையின் சாரத்தையும் இழக்காமல், நவீன வடிவங்களில் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. பாரம்பரியம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கிடையே இவ்விதமான சமநிலையை உருவாக்கியதே தினமலரின் சாதனையாகும்.
நம்பிக்கை என்பது வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான அணுகுமுறையால் உருவாகுகிறது என்று லலிதா ஜுவல்லரியில் நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம். தினமலரின் தத்துவம் எங்களது நம்பிக்கைகளோடு பெரிதும் ஒத்துப்போகிறது.
நகை விளம்பரங்களில் அச்சின் தரமும், வண்ணங்களின் துல்லியமும் இன்றியமையாதவை. அவ்விதத்தில், தினமலர் எங்கள் லலிதா ஜூவல்லரி விளம்பரங்களுக்கு பெரிதும் மதிப்பு சேர்த்துள்ளது.
பவள விழா ஆண்டை முன்னிட்டு, தினமலரின் சேவைக்கும், நிலைத்த கொள்கைகளுக்கும் எங்கள் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். தினமலர் குழுவிற்கு, இன்னும் பல தசாப்தங்கள் சிறப்பான வளர்ச்சி கிடைக்க, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டாக்டர் எம்.கிரண் குமார்
சேர்மன், லலிதா ஜூவல்லரி மார்ட் லிமிடட்
