/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
தொழில் முனைவோரோடு பயணிக்கிறது 'தினமலர்'
/
தொழில் முனைவோரோடு பயணிக்கிறது 'தினமலர்'
PUBLISHED ON : டிச 26, 2025 12:00 AM

காலைப் பொழுதில், காபி கோப்பையோடு எனது கைகளில் தினசரி தவழும் தினமலருக்கு பவள விழா வாழ்த்துகள். நான் மாணவனாய் இருந்த காலத்தில் இருந்தே தினமலருக்கும் எனக்குமான நட்பு தொடர்கிறது.
செய்தி ஊடகங்களின் ஆணிவேராய் இருக்கக் கூடிய பத்திரிகைகளில் தனித்துவமான, சீரான வளர்ச்சியை அடைந்திருக்கிறது தினமலர். காலத்திற்கேற்ற உத்திகள், மேம்பாடு, வடிவமைப்பு, செய்திகளின் கருத்தாக்கம் ஆகியவற்றில் தினமலர் தனி முத்திரை பதித்து வருகிறது என்பது பெருமைபடக்கூடிய விஷயம். இன்றைக்கு பல சமூக ஊடகங்கள் இருப்பினும் தினமலருக்கென்று தனிச்சிறப்பு உண்டு.
அரசியல், சமூகம், கல்வி, விளையாட்டு பொழுதுபோக்கு, வணிகம் என அனைத்து துறைகளுக்கும் நெடுங்காலமாக தினமலர் பங்களித்து வருகிறது.
தோழமையோடு ஏற்கக் கூடியவற்றை எடுத்துக் கூறியும், துணிச்சலோடு எதிர்க்க வேண்டியவற்றை சுட்டிக்காட்டியும், தனது சமூகப் பணியை சிறப்புற செய்து வருகிறது. வணிகம், சார்ந்த செய்திகள் மற்றும் நல்ல தரமான விளம்பரங்கள் மூலம் வணிகத்தை மக்களிடத்தே கொண்டு சேர்க்கும் பணியில் தினமலர் முன்னனியில் நிற்கிறது. என்னை போன்றோரின் தொழில் பயணத்தில் நீண்ட காலமாக உடன் பயணிக்கும் தினமலர், செய்திகள் கொடுப்பது மட்டுமல்லாது அரிய உந்துசக்தியாகவும் இருந்து வருகிறது.
மேலும் தினமலர் நிர்வாக குடும்பத்தினரோடு எங்களுக்கான நீண்ட கால உறவு தலைமுறை, தலைமுறையாக தொடர்வது மகிழ்ச்சி.
ஒரு பத்திரிகை என்பதை தாண்டி தமிழ்நாட்டிற்கு பல எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும் உருவாக்கி அறிமுகப்படுத்தியிருக்கிறது தினமலர். பெண்கள், ஆண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் விரும்பும் தினமலருக்கு பவள விழா வாழ்த்துகள்
கே.சிவகுமார்
நிர்வாக இயக்குனர், ஆரெம்.கே.வி சில்க்ஸ் பி., லிட்.,

