sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தினமலர் பவள விழா

/

களிமண்ணை 'டெடிபேர்' ஆக்கிய 'தினமலர்'

/

களிமண்ணை 'டெடிபேர்' ஆக்கிய 'தினமலர்'

களிமண்ணை 'டெடிபேர்' ஆக்கிய 'தினமலர்'

களிமண்ணை 'டெடிபேர்' ஆக்கிய 'தினமலர்'


PUBLISHED ON : அக் 17, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 17, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தினமலர்' நாளிதழ் ஓர் அடையாறு ஆலமரம். அதன் கிளைகளில், ஆயிரக்கணக்கான எழுத்துப் பறவைகள் ஜீவனம் நடத்துகின்றன. தினமலருக்கும், எழுத்தாளர்களுக்கும், செய்தியாளர்களுக்கும், முகவர்களுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் இடையே, ஓர் ஆத்மார்த்தமான பந்தம் இருக்கிறது. 'தினமலர்' தான் சார்ந்த பணியாளர்களின் நல்லது, கெட்டதுகளில் பங்கேற்று, தாய் பறவையாய் அவர்களை அரவணைத்துக் கொள்கிறது. 'தினமலர்' ஒரு வாய் உணவை உட்கொள்ளும் முன், இரண்டு வாய் உணவை, தன் நிழலில் உள்ளோருக்கு ஊட்டி விடுகிறது. அந்த விருந்தோம்பல் பாரம்பரியம், ஐந்து தலைமுறைகளாக நீடித்து வருகிறது.

எனக்கும், தினமலருக்கும் நாற்பதாண்டு உறவு. வெறும் நாசராக இருந்த என்னை, 'தினமலர்' ஸ்வீகரித்து ஆர்னிகா நாசர் எனும் ஆஸ்தான எழுத்தாளர் ஆக்கியது. களிமண்ணாக இருந்த என்னை, வாசகர்கள் கொஞ்சி மகிழும் 'டெடிபேர்' ஆக்கியது தினமலர். எனக்கு இருவர் ஆசிரியர்கள். ஒருவர் என் மனைவி அலிமா என்ற வகிதா நாசர். இன்னொருவர் தினமலர் அந்துமணி.

அந்துமணி எனக்கு நேரடியாக எதையும் கற்றுத் தரவில்லை. அவரது கண்ணசைவிலேயே என் தரத்தை உயர்த்திக் கொண்டேன். கட்டைவிரல் கேட்காத துரோணர் அவர். பதிலாக என் கட்டைவிரலுக்கு மகுடம் சூடினார். பாவனை விஞ்ஞானக்கதைகளும், இஸ்லாமிய நீதிக்கதைகளும், சிறுவர் தொடர்கதைகளும் எழுதி, என் குருநாதருக்கு காணிக்கை ஆக்கினேன். ஆண்டுதோறும் ரம்ஜான் பக்ரீத் மலர்கள் தயாரிக்கும் மதநல்லிணக்கப் பணியை எனக்கு வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது தினமலர்.

தினமலரின் செய்திகளில் காரம், மணம், குணம் இருக்கும். 'தினமலர்' பத்திரிகை இலக்கணம் கற்று தேர்ந்து, அதன் இன்னொரு பரிமாணத்தை சாத்தியமாக்கிய புதுக்கவிதை. 'தினமலர்' அச்சுப்பிரதி எனும் சாளரம் வழியாக, உலகை அறிவுப்பூர்வமாக, ஆக்கப்பூர்வமாக பார்க்க நினைக்கும் அடித்தட்டு மக்களுக்கு உரியது.

தினமலரின் எழுத்துரு வாசிக்கும் கண்களுக்கு, மயிற்பீலி சாமரம் வீசும். ஏதேனும் முக்கியமான நிகழ்வை அவர்கள் செய்திகளால் நிரப்புவதில்லை; பதிலாக ஒளிப்படங்களால் நிரப்புவர். தினமலரில் அரசியல் நிலைப்பாடு உளப்பூர்வமானது. எதிர்கருத்து உள்ளவர்கள் கூட தினமலரிலிருந்து நான்கைந்து பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.

தினமலர் நாளிதழ் போன்று உண்மையும், நேர்மையும் பொது வாழ்வில் ஈடுபடுவோருக்கு இருந்தால், இந்தியா சுபிட்சம் அடையும். நான் ஒரு தினமலர் தயாரிப்பு என்பதை நெஞ்சுயர்த்தி அறிவிக்கிறேன். தினமலர் ஒரு ட்ரென்ட் செட்டர். தினமலரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில், என் மகன் நிலாமகன் வாழ்த்து தெரிவிப்பான். தமிழ் உள்ளவரை தினமலர் வாழ்க!

அன்புடன்,

ஆர்னிகா நாசர்,

எழுத்தாளர்






      Dinamalar
      Follow us