PUBLISHED ON : ஏப் 01, 2026 12:00 AM

இதழியல் துறையில், தனக்கென தனி முத்திரையை பதித்து, 75ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் 'தினமலர்' நாளிதழுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
பல தசாப்தங்களாக, தினமலர், தமிழில் தரமான மற்றும் நம்பகமான செய்திகளை வழங்கி வருகிறது. தொழில்-வர்த்தக துறை சார்ந்த செய்திகள் சிறப்பாக குறிப்பிடத்தக்கவை. சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு, சந்தை நிலவரம், வணிக வாய்ப்புகள் மற்றும் அரசு திட்டங்கள் பற்றிய செய்திகள் தேவையானவை. இவற்றை தினமலர் சரியாக கொடுத்து வருகிறது. அது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்கங்கள் பற்றிய செய்திகளையும் தருகிறது. இவை தொழில் துறையினருக்கு மட்டுமல்லாது இளைஞர்களுக்கும் பயனுள்ளவை. தொழில் தொடங்குதல், முதலீடு மற்றும் வரி அம்சங்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறது தினமலர்.
விவசாயிகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தும் தினமலர், பயிர் பாதுகாப்பு முதற்கொண்டு அனைத்து அம்சங்களிலும் நிபுணர்களின் ஆலோசனைகள் மட்டும் அல்லாமல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உள்ளிட்ட புதுமைகளையும் அவர்களிடம் கொண்டு சேர்க்கிறது.
தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்தை முன்னிறுத்தி, சமூகத்தில் நேர்மறை மாற்றத்தை உருவாக்கும் பொறுப்புணர்வுடனும் நேர்மையுடனும் செயல்பட்டு வரும் தினமலர், வாசகர்கள் மனதில் உறுதியான இடத்தை பெற்றுள்ளது.
தேச வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக, ஒய்வில்லாமல் பணியாற்றி வரும் தினமலர் நாளிதழுக்கு எங்களின் இதயம் கனிந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆர். அருண் கார்த்திக்
தலைவர், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், கோவை; தலைவர், உடுமலை தொழில் வர்த்தக சபை
