தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/அஞ்ஞானத்தை அகற்றும் 'தினமலர்'

அஞ்ஞானத்தை அகற்றும் 'தினமலர்'

அஞ்ஞானத்தை அகற்றும் 'தினமலர்'


PUBLISHED ON : ஏப் 10, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்பிற்கும் பாசத்திற்கும் தினமலர்

அன்பிற்கும் ஆசைக்கும் தினமலர்

எண்ணுக்கும் எழுத்துக்கும் தினமலர்

கண்ணுக்கு விருந்தளிக்கும் தினமலர்

காண்போரைக் கவர்ந்திருக்கும் தினமலர்

கற்றவரை காண வைக்கும் தினமலர்

உள்ளத்தை கொள்ளை கொள்ளும் தினமலர்

ஊரெங்கும் ஒரே பேச்சு தினமலர்

12 ஆண்டுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர்

தினம் தினம் பூத்து குலுங்கும் தினமலர்

விஞ்ஞானத்தை விளக்கும் தினமலர்

அஞ்ஞானத்தை அகற்றும் தினமலர்

மெய்ஞானத்தை உணர்த்தும் தினமலர்

உன் ஞானம் பெற படிக்க வேண்டியது தினமலர்

உள்ளூர் செய்தியை புரிந்து கொள்ள தினமலர்

உலக செய்தியை தெரிந்து கொள்ள தினமலர்

உறவுக்கு உயிர் கொடுக்கும் தினமலர்

உரிமைக்கு குரல் கொடுக்கும் தினமலர்

உத்தமரை உயர்த்த வைப்பதும் தினமலர்

உண்மையை உரக்கச் சொல்வதும் தினமலர்

நான் சிறுவயதில் இருந்தே 'தினமலர்' வாசித்து வளர்ந்தவன். தமிழ் மொழியை எளிமையாகவும் தெளிவாகவும் கற்றுக்கொள்ள உதவிய ஒரு முக்கியமான ஊடகமாக தினமலர் இருந்தது. என் வாசிப்பு பழக்கத்தையும், சமூக விழிப்புணர்வையும் வளர்த்ததில் தினமலரின் பங்கு மிகப் பெரிது.

தினமலர் எப்போதும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செய்திகள் வழங்கும் ஒரு நம்பகமான நாளிதழாக திகழ்கிறது. எந்த ஆட்சி இருந்தாலும், உண்மையை அஞ்சாமல் வெளிப்படுத்தும் அதன் தைரியம் மிகவும் பாராட்டத்தக்கது. சமூக நலனையும், பொதுமக்களின் குரலையும் முன்னிறுத்தும் அதன் பண்பு சிறப்புக்குரியது.

இந்த பவள விழா ஆண்டு, தினமலரின் நீண்ட கால சேவைக்கும் அதன் சமூகப் பொறுப்புணர்விற்கும் ஒரு சிறந்த சான்றாக அமைந்துள்ளது. இன்னும் பல ஆண்டுகள் தினமலர் வளர்ச்சி பெற்று, உண்மை மற்றும் நேர்மையின் ஒளியை பரப்பட்டும் என மனமார வாழ்த்துகிறேன்.

எஸ்.சாந்தகுமார்

பொதுச்செயலாளர்- சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us