PUBLISHED ON : மே 28, 2026 12:00 AM

தமிழ் பத்திரிகை உலகில் உயர்ந்த இடத்தை பெற்று, உண்மை செய்திகளையும் சமூக பொறுப்பையும் முன்னிறுத்தி, மக்களின் நம்பிக்கையை வென்ற தினமலர் நாளிதழ் தனது 75வது ஆண்டு பவளவிழாவை கொண்டாடும் இந்த இனிய தருணத்தில், இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
காலத்திற்கேற்ற செய்திகளையும் கல்வி, வேலைவாய்ப்பு, ஆன்மிகம், சமூக முன்னேற்றம் போன்ற பல துறைகளில் பயனுள்ள தகவல்களையும் வழங்கி, மக்களின் வாழ்வோட்டத்தில் ஓர் அங்கமாக தினமலர் திகழ்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டியாக இருந்து அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது.
எங்கள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹாவித்யாலயா (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), ஏனாத்தூர், காஞ்சிபுரம், தினமலருடன் இணைந்து பல கல்வி நிகழ்ச்சிகள், வழிகாட்டி முகாம்கள் மற்றும் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறது. இதன் மூலம் பல மாணவர்கள் தங்கள் கல்வி இலக்குகளை அடைய வழிவகை செய்யப்பட்டு வருகிறது என்பதில் பெருமை கொள்கிறோம்.
மாணவர்களின் அறிவாற்றலை வளர்த்தெடுக்கும் நோக்கில், பாடத்திட்ட தகவல்கள், திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் கல்வி ஆலோசனைகளை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் வழங்கி வரும் தினமலரின் சேவை மிகுந்த பாராட்டுக்குரியது. இது கல்வி சார்ந்த சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது.
நம்பிக்கையையும் நெறியையும் வளர்க்கும் ஊடகமாக விளங்கும் தினமலர், எதிர்காலத்திலும் சமூகத்திற்கு சிறப்பாக சேவை செய்து, மேலும் பல உயரங்களை எட்டிட வாழ்த்துகிறேன்.
ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் அருளும், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி அவர்களின் ஆசீர்வாதமும் நிலைத்து, தினமலர் நாளிதழ் மேலும் பல ஆண்டுகள் வளர்ச்சி பெற்று, சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
முனைவர் பேராசிரியர் ஜி. ஸ்ரீனிவாசு
துணைவேந்தர், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹாவித்யாலயா, காஞ்சிபுரம்
