தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/பத்திரிகை உலகின் சகாப்தம் 'தினமலர்'

பத்திரிகை உலகின் சகாப்தம் 'தினமலர்'

பத்திரிகை உலகின் சகாப்தம் 'தினமலர்'


PUBLISHED ON : மே 12, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 12, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பத்திரிகை உலகில், 75 ஆம் ஆண்டு பவளவிழா கண்டு, நூற்றாண்டை நோக்கி தடம் பதிக்கும், 'தினமலர்' நாளிதழுக்கு, திராவிட வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்துகள். காலத்திற்கு ஏற்றார் போன்று, சூழ்நிலைக்கு தகுந்தவாறு, எந்தவொரு பூவும், தன் நிறத்தை மாற்றிக் கொள்வதில்லை. அதை போல், எந்த சூழ்நிலையிலும், எப்பேர்பட்ட நெருக்கடியிலும், யாருக்காகவும், எதற்காகவும், தன் இயல்பை மாற்றிக் கொள்ளாமல் பருவ மாற்றங்களால் உருவமாற்றம் அடையாத, மார்கண்டேய மலரைப் போன்று, 'தினமலர்' நாளிதழ் விளங்குகிறது,

'தினமலர்' நாளிதழ் பக்கத்திற்கு பக்கம், அரசியல், ஆன்மிகம், அறிவியல், விளையாட்டு, பொருளாதாரம் என, வித்தியாசமான செய்திகளை, தன் வாசகர்களுக்கு தினமும் வழங்கி வருகிறது அதற்கு பின் இருக்கும் உழைப்பு வியர்வையை யார் அறிவார். ஜனநாயகத்தை தாங்கி நிற்கும், அழகிய நான்கு துாண்களில் ஊடகத்துறையும் ஒன்று. அந்த ஜனநாயக தேர் உருள்வதற்கு, தோள் கொடுத்து துணை நிற்க வேண்டும்,

திரைத் துறையில், யார் உச்சத்தில் இருக்கின்றனரோ, அவர்களைப் பற்றிதான் கிசு கிசு எழுதுவர். அரசியலில் யார் உயிர்ப்புடன் இயங்குகின்றனரோ, அவர்களைப் பற்றி வதந்திகளை எழுதுவர். 'தினமலர்' நாளிதழின், 'டீ கடை பெஞ்சில்' குப்பண்ணாவும், அன்வர்பாயும் சுடச் சுட, இஞ்சி போட்ட டீ அருந்தியபடி, உயிர்ப்புடன் இருக்கும் அரசியல் கட்சிகள் குறித்தும், நாட்டு நடப்பை விவாதிப்பது சுவாரஸ்யமானது.

இதில் பாதிப்புக்கு உள்ளான அரசியல்வாதிகளில் நானும் ஒருவன். நான் சார்ந்து இருந்த கட்சியிலிருந்து, என்னை நெருக்கடிக்கு உள்ளாக்கி வெளியேற்ற, அவர்கள் வாசித்த குற்றப்பத்திரிகையில் ஒன்று, 'தினமலர்' நாளிதழில் வரும் செய்திகள். அதற்கு நான்தான் காரணம் என, குற்றம் சாட்டினர். இதோ நான் வெளியேறி ஆண்டு ஒன்றை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. ஆனால், அந்த கட்சி குறித்து, இன்றும் 'தினமலரில்' செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

சர்வதேச அளவில், சகிப்புத்தன்மை குறைந்து, எதிர் கருத்தியலை ஏற்றுக் கொள்ளாமல் போனதால், நவநாகரிகத்தின் தொட்டில் பிரதேசம், பிரான்ஸ் நாட்டில், 'சார்லி எப்டோ' பத்திரிகை, இலங்கையில் 'சண்டே லீடர்' போன்ற பத்திரிகைகள் தாக்குதலுக்கு உள்ளனதைப் போன்று, தமிழகத்தில் அதிகம் தாக்குதலுக்கு உள்ளானவர்களில், 'தினமலர்' செய்தியாளர்கள் எண்ணிக்கை கூடுதல் என, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன,

தமிழகத்தின் அரசியல் கட்சிகளின், அந்தரங்க மாளிகையில் படிந்திருக்கும் துாசியை தட்டி, வெளிப்புற வீட்டிற்கு, வெள்ளை அடித்ததில், 'தினமலர்' நாளிதழ் முந்தியிருக்கிறது. நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் பத்திரிகையாளர்களிடம்,'என்னைப் பற்றிய நல்ல செய்திகளைப் போடாவிட்டாலும் பரவாயில்லை. என் குறைகளையாவது சுட்டிக்காட்டி எழுதுங்கள். ஆனால் என்னைப் பற்றி செய்திகள் மட்டும் போடாமல் இருந்து விடாதீர்கள்' என்றாராம்.

அந்த ஜனநாயக விழுமியங்களை, பேணிப் பாதுகாக்கும் தலைவர்கள் அரிதாகி வரும் காலகட்டத்தில், 'தினமலர்' நாளிதழ் போன்ற ஊடகங்கள், தங்கள் தனித்தன்மையை பாதுகாக்க, எதிர்நீச்சல் போட்டே ஆக வேண்டும். அதன் பயணம் சிறக்க, தாய்த் தமிழ்நாடு துணை நிற்க வேண்டும்.



மல்லை சி.ஏ.சத்யா

தலைவர்

திராவிட வெற்றிக் கழகம்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us