/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
'தினமலர்' அறிவியல் செய்திகளை ரசிக்கிறேன்
/
'தினமலர்' அறிவியல் செய்திகளை ரசிக்கிறேன்
PUBLISHED ON : டிச 31, 2025 01:52 AM

அறிவியல் வளர்ச்சி ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளம். அந்த வளர்ச்சியை எளிய மொழியில், துல்லியமான தகவல்களுடன், மக்களிடையே தொடர்ந்து கொண்டு சேர்க்கும் பணியை, தினமலர் கடந்த 75 ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறது கடந்த 40 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு, மறைந்த மாமனிதர் அப்துல் கலாமுடன் 15 ஆண்டுகள் ஆராய்ச்சியில் பணிபுரிந்த நான், தினமும் தினமலரை ஆர்வத்துடன் வாசித்து, அதில் வரும் அறிவியல் -தொழில்நுட்ப செய்திகளை ரசித்து படித்து வருகிறேன். விஞ்ஞான ரீதியிலான என் அறிவியல் தமிழ் அறிவை வளர்க்க, தினமலர் மிகவும் உறுதுணையாக இருக்கின்றது.
இந்தியாவின் சாதனைகளான செயற்கை கோள்களை ஏந்திச் செல்லும் ராக்கெட் செயற்கை கோள் போன்றவைகளின் துல்லியமான விபரங்கள், பயன்பாடு மட்டுமன்றி வெளிநாட்டு அறிவியல் நிறுவனங்களின் முன்னேற்றங்களையும் உடனுக்குடன், தெளிவாக வாசகர்களுக்கு எடுத்துரைப்பதில் தினமலர் முன்னணியில் உள்ளது.
விண்வெளி விநோதங்கள், உலகளாவிய அறிவியல் முன்னேற்றங்கள், தொழில்நுட்ப சாதனைகள் ஆகியவை மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் தொடர்ந்து வெளியிடப்படுவது பாராட்டத்தக்கது.
உலகின் முன்னணி ஆராய்ச்சி மையங்களில் வெளிவரும் புதிய தகவல்களை உடனுக்குடன் வெளியிட்டு, மக்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் பணியும் தினமலரின் முக்கிய பங்களிப்பாகும். பன்னாட்டு விஞ்ஞான ஆராய்ச்சி கூடங்களின் சாதனைகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை அறிவு துணுக்குகளாக தினமலர் அறிவியல் மலர் மூலம் கொண்டு செல்வது இளைஞர்களுக்கு ஆர்வத்தை தூண்டிவிடுகிறது .
அறிவு சக்தி' என்ற கருத்தை மையமாகக் கொண்டு. மாணவர்கள், தொழில் துறையினர், ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும் பயன் தரும் செய்திகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இத்தகைய அறிவியல் சார்ந்த செய்தியளிப்பு, மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா போன்ற தேசிய முயற்சிகளுக்கும். நாட்டின் பாதுகாப்பு-தொழில்நுட்ப சுயசார்புக்கும் பெரும் ஊக்கமாக உள்ளது. புதிய தலைமுறையினரை அறிவியல்-பொறியியல் துறைகளில் ஈர்த்து, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைப்பதில் தினமலரின் பங்கு அளவிட முடியாதது.
தற்போது, 75வது ஆண்டு பவள விழாவை கொண்டாடும் இந்த வேளையில், அறிவியலை மக்கள் மத்தியில் பரப்பும் தினமலரின் சேவை தொடர்ந்து உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.வளர்க இந்தியாவின் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி.
வளர்க தினமலர் சேவை ஜெய்ஹிந்த்
அன்புடன்.
அறிவியல்
முனைவர் நா. சிவசுப்ரமணியன்,
முன்னாள் இஸ்ரோ முதுநிலை விஞ்ஞானி,
முன்னாள் தலைவர். இந்திய பொறியாளர் அமைப்பு,
மதுரை மையம்

