/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
நுாற்றாண்டு கடந்து தொடரட்டும் 'தினமலர்' சேவை
/
நுாற்றாண்டு கடந்து தொடரட்டும் 'தினமலர்' சேவை
PUBLISHED ON : அக் 22, 2025 12:00 AM

தமிழகத்தில் தேசிய உணர்வுடன் வெளிவரும் நாளிதழ்களில், 'தினமலர்' நாளிதழுக்கு, தனித்துவமான இடமுண்டு. லட்சக்கணக்கான வாசகர்களின் பேராதரவுடன் வெளிவரும் 'தினமலர்' நாளிதழ், பவளவிழா காண்பது பெரும் சிறப்பு.
'தலைப்புகள்' வழியாக செய்தியை படிக்க ஆர்வத்தை துாண்டுவதில் ஆகட்டும்; அகில இந்திய மற்றும் சர்வதேச அரசியல் குறித்த, முக்கிய செய்திகளை தவற விடாமல், எளிய முறையில் வெளிவிடுவதாகட்டும், எல்லா வகையிலும், 'தினமலர்' தனது பணியை பாராட்டுக்குரிய வகையில் மேற்கொண்டு வருகிறது.
கனமான கருப்பொருளை தாங்கி, அறிவார்ந்த பெருமக்கள் எழுதும் சிறப்பு கட்டுரைகளுக்கு, முக்கிய இடமளித்து, 'தினமலர்' அவ்வப்போது வெளியிட்டு வருவதன் வழியே, வாசகர்களுக்கு பயனுள்ள வாசிப்புக்கு இடம் அளிக்கிறது.
'தினமலர்' சார்பில், வாரந்தோறும் வெளிவரும் ஆன்மிக சிறப்பு பக்கங்கள், பயனுள்ள செய்திகளையும், 'வாரமலர்' அந்துமணியின் அனுபவங்களுடன் பல துணுக்குகளையும் தாங்கி, தவற விடாமல் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூகத்திற்கு எல்லா வகையிலும் சேவை செய்து வரும் 'தினமலர்' நுாற்றாண்டு கடந்து பீடுநடை போட வாழ்த்துகிறோம்.
இப்படிக்கு,
ரமேஷ்
தலைமை நிருபர், 'துக்ளக்'

