தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/நம்பகமான 'நம்பர் ஒன்'

நம்பகமான 'நம்பர் ஒன்'

நம்பகமான 'நம்பர் ஒன்'


PUBLISHED ON : பிப் 26, 2026 12:13 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2026 12:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுவயதிலேயே, 'தினமலர்' எனது மனதை கவர்ந்த நாளிதழ். திருநெல்வேலியை தாயகமாக கொண்டதால், எங்கள் மாவட்டத்தில், தினமலர் எவ்வளவு பாப்புலர் என எனக்கு தெரியும்.

கடந்த 40 ஆண்டுகளாக, நான், சென்னை சூரியா மருத்துவமனையில், இதயநோய் நிபுணராக பணிபுரிகிறேன். தினமலர் எனது மத்துவக் கட்டுரைகளை அடிக்கடி வெளியிட்டு உள்ளது. நாங்கள் நடத்திய இலவச மருத்துவ முகாம்கள் அனைத்தையும் தினமலர் பதிவு செய்து வந்துள்ளது. உலக இதய தினம் மற்றும் யோகா தினம் போன்ற சிறப்பு நாட்களில் எனது கட்டுரைகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தியுள்ளது.

உலகை உலுக்கிய 'கோவிட் 19' பயங்கர காலத்தில், தினமலர் செய்த செய்தி சேவையை என்னால் மறக்கவே முடியாது. கடந்த சில ஆண்டுகளாக, விஜயதசமியன்று கோவில்களில் சிறார்களுக்கு வித்யாரம்பம் நடத்தி, ஓர் அரிய சேவையை தினமலர் செய்து வருகிறது. அவற்றில் என்னையும் இணைத்து, தினமலர் கௌரவப்படுத்தியது. இது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.

ஆண்டுகள் 75 ஆனாலும், இளமையோடு திகழ்கிறது, தினமலர். தனது நடுநிலையான கொள்கையை விட்டுக்கொடுக்காத நாளிதழ் தினமலர்.

கட்சி பாகுபாடின்றி செய்திகளை வெளியிடுவதில் தினமலருக்குத் தான் முதலிடம். அதனால் தான் பல்வேறு அரசியல் தலைவர்களின் கைகளில், காலையில் தவழும் முதல் நாளிதழ் தினமலர்! நம்பகமான தமிழ் நாளிதழ்களில் 'நம்பர் ஒன்' தினமலர் தான்.

அரசியல் முதல் இலக்கியம் வரை அத்தணை துறைகளை பற்றியும் சமமான சுவையான கவரேஜ் செய்வது தினமலர் மட்டுமே.

எனக்கு பழக்கமான நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் நீண்டகாலமாக தினமலரில் திறமையாக பணிபுரிகிறார்கள். தினமலர் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும், இந்த சிறப்பான 75வது ஆண்டை முன்னிட்டு எனது அன்பான வாத்துக்கள்!

டாக்டர் எம். ஜெயராஜா,

இதயநோய் மருத்துவர், சூரியா மருத்துவமனை, சென்னை

----------------------

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us