/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
'தினமலர்' வாசகனை உயர்வாக பார்க்கிறது சமூகம்
/
'தினமலர்' வாசகனை உயர்வாக பார்க்கிறது சமூகம்
PUBLISHED ON : டிச 06, 2025 12:00 AM

'உன் நண்பனைப் பற்றிச் சொல்; உன்னைப் பற்றி சொல்கிறேன்' என்பார்கள். 'நீ என்ன நாளிதழ் வாசிக்கிறாய் என்பதைச் சொல்; உன்னைப் பற்றிச் சொல்கிறேன்' என யாரேனும் சொன்னால், 'தினமலர் நாளிதழ் வாசிக்கிறேன்' என சொல்லும் வாசகனுக்கு, இந்த சமூகம் உயர்ந்த மதிப்பை தருகிறது.
இதற்கு முக்கிய காரணம், தன்னை வாசிக்கும் வாசகனை தரம் உயர்த்துகிறது 'தினமலர்' நாளிதழ். இதனால் தான், 74 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கைக்குரிய நாளிதழாக இருக்கிறது.
தினசரி நிகழ்வுகள் மற்றும் முக்கிய சமூக தகவல்களை மக்களிடம் துல்லியமாகவும் தெளிவாகவும் கொண்டு சேர்க்கும் மிகப்பெரும் பொறுப்பை உணர்ந்து, திறம்பட செயலாற்றி வருவதால்தான், இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் கூட, உண்மையை உணர்ந்துகொள்ள மக்கள் நாடிவரும் நாளிதழாக 'தினமலர்' திகழ்கிறது.
செய்திகளோடு தொழில், கல்வி, சமூக மற்றும் பொருளாதார தகவல்களை பொறுப்புடன் வெளியிட்டு வரும் 'தினமலர்', அரசியல் செய்திகளை சொல்வதில் தனித்துவமாகத் திகழ்கிறது. அரசியல் நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கும் 'தினமலர்' நாளிதழின் திறன், பெருவாரியான வாசகர்களால் கொண்டாடப்படுவதை தனிப்பட்ட முறையில் நான் அறிவேன்! இதனால், பல துறைகளில் பணிபுரியும் மக்களுக்கு நம்பிக்கைக்குரிய தகவல் ஆதாரமாக 'தினமலர்' உள்ளது.
அச்சு ஊடகங்களுக்கு பல சவால்கள் எழுந்த நிலையிலும், பல மாற்றங்களுக்கு உட்பட வேண்டிய கட்டாய சூழலிலும், அதற்கேற்ப 'தினமலர்' தன்னை தகவமைத்துக் கொண்டு தன் தனித்துவத்தை இழக்காமல் வாசகர்களின் பேராதரவோடு வெற்றிநடை போட்டு வருகிறது.
டிஜிட்டல் மயக்கத்தில் சிக்கியிருக்கும் இளம் வாசகர்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக 'தினமலர்' நாளிதழின் மேல் மோகம் கொண்டு வருவதும், அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, 'தினமலர்' எழுத்து அவர்களை ஈர்த்து வருவதும், வாசகர்கள் உடனான பந்தத்திற்கு 'தினமலர்' தரும் முக்கியத்துவத்திற்கான எடுத்துக்காட்டு. அந்த வகையில், ஒவ்வொரு தலைமுறைக்கும் அறிவை வளர்க்கும் நம்பத்தகுந்த தோழன் 'தினமலர்'.
இணைப்பிதழ்கள் மற்றும் சிறப்பு பக்கங்கள் மூலம் தன் வாசகர்களுக்கு பல்சுவை விருந்து படைத்து வரும் 'தினமலர்' நாளிதழுக்கு இந்த 75வது ஆண்டும் வெற்றிகரமான ஆண்டாக நிச்சயம் அமையும். இதற்கு எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துகள்.
தேன் இருக்கும் மலர் தேடி வண்டு வருவது இயல்பாய், இயற்கையாய் நிகழும் ஒன்று. நுாறாண்டுகள் கடந்தாலும், அறிவுத்தேன் ததும்பி இருக்கும் 'தினமலர்' தேடி, வாசகர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். 'இந்த அறிவுக்கூட்டத்தில் நானும் ஒருவன்' எனும் பெருமை கொள்கிறேன்.
பார்த்திபன் கேசவராஜ்,
நிர்வாக இயக்குனர், நித்ய அமிர்தம் இண்டியன் ஃபுட் பி., லிட்., சென்னை

