தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/இனிமையும் எளிமையும் 'தினமலர்'

இனிமையும் எளிமையும் 'தினமலர்'

இனிமையும் எளிமையும் 'தினமலர்'


PUBLISHED ON : பிப் 07, 2026 02:23 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 07, 2026 02:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ் மொழி இனிமையானது, நீரை போல் எளிமையானது, தெளிவானது. இக்கருத்தை இனிமையும் நேர்மையும் தமிழ் எனல் ஆகும் என்று பழந்தமிழ் நூலான பிங்கல நிகண்டு கூறும். இதுபோல 'தினமலர்' செய்திகளில் இடம்பெறும் சொற்களும் வாக்கியங்களும் இனிமையானவை,எளிமையானவை, தெளிவானவை, எல்லோருக்கும் எளிதில் விளங்கும் தன்மையானது, இவை அனைத்தும் உண்மையானவை.

கால மாற்றத்திற்கு ஏற்பவும், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் தன்னை வடிவமைத்துக் கொள்வதில் தினமலர் முதலிடம் பெறுகிறது. சமூக ஊடகங்களில் தினமலர் முன்னிலை வகிப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

என்னிடம் உள்ள கடவுள் ஈடுபாட்டிற்கு ஆன்மிக மலர் முக்கிய காரணமாகும். இதில் வரும் ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றிய மனிதனை நல்வழிப்படுத்தும் கருத்துக்கள் என் மனத்தை நெறிப்படுத்துகின்றன. இதிலிருந்து நான் வாசித்த கருத்துக்களை எனக்கு நெருக்கமானவர்களிடம் பகிரும் போது, எனக்கு ஒரு மனத்திருப்தி ஏற்படும்.

தினமலர் வாரமலர், திண்ணை என்ற தலைப்பில் சிறந்த மனிதர்கள் பற்றிய அற்புதமான கருத்துக்களை சில வரிகளில் வெளியிடுகிறது. அவற்றுள் சிலவற்றை தினமும் என் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் நண்பர்களுக்கு பகிர்கின்றேன்.

டீ பருகிக் கொண்டே டீக்கடை பெஞ்ச் பகுதி, வாசிக்கும் போது டீயின் சுவையை விட சுவையான செய்திகளை வாசிக்கும் போது சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் அதிகமாகிறது. இது உங்கள் இடம் என்னும் பகுதி, வாசகர்களின் உணர்வுகளுக்கும், சிந்தனைகளுக்கும் மதிப்பளிக்கும் பகுதியாகும்.

படிக்கலாம் வாங்க என்னும் பகுதி, புத்தம் புதிய அறிவு சார்ந்த நூல்களை அறிமுகம் செய்து அந்நூல்களை வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது.

தினமலரைப் போல எனக்கும் வயது 75.

தினமலர் மகத்தான மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு சாதனை புரிய மனதார வாழ்த்துகின்றேன்.

ஆர்.ராமகிருஷ்ணன்

நிறுவனர்,

சுகன்யா குரூப் ஆப் கம்பெனிஸ், மதுரை,அருப்புக்கோட்டை,காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us