தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/'தொழிலுக்கு மேலும் பக்கம் தேவை'

'தொழிலுக்கு மேலும் பக்கம் தேவை'

'தொழிலுக்கு மேலும் பக்கம் தேவை'


PUBLISHED ON : ஜன 29, 2026 12:23 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 29, 2026 12:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த 55 ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருப்பவன் நான். மத்திய, மாநில அரசுகளின் வரவு செலவுத் திட்டங்கள் குறித்து, தொழில் வர்த்தக சங்கங்களின் சார்பாக கருத்து தெரிவிப்பதுண்டு. அதே போல், வரி சீரமைப்பு ஆலோசனைகளை முன்வைப்பதும், தென் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான கட்டமைப்புகள் தொடர்பான கோரிக்கைகளை வைப்பதும் உண்டு. அவை பற்றிய செய்திகளை, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து வெளியிட்டு வரும் நாளிதழ் 'தினமலர்' என்பதில் எனக்கு மிகவும் பெருமை. எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவரோ, குடும்பத் தலைவியோ, வணிகம் செய்பவரோ, விஞ்ஞானியோ, தொழில் வல்லுனரோ அல்லது வெறுமே உலக நடப்புகளை தெரிந்துகொள்ள விரும்புகிறவரோ, யாராக இருந்தாலும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் தினமலர் நாளிதழில் கண்டிப்பாக இருக்கும். உள்ளூர் முதல் உலகச் செய்திகள் வரை ஓர் பறவையின் பார்வையில் செய்திகளை தொகுத்துத் தருவது தினமலரின் தனிச்சிறப்பு.

ஆங்கிலம் அவ்வளவாக தெரியாத குறு, சிறு தொழில் வணிக துறையினரும் தங்கள் வளர்ச்சிக்காக தெரிந்துகொள்ள வேண்டிய பல முக்கிய பிசினஸ் செய்திகளை எளிய தமிழில் 'தொழில்' பகுதியில் வெளியிடுவதை மிகவும் வரவேற்கிறோம். தமிழில் ஒரு பிசினஸ் நாளிதழாகவும் தினமலர் உருவாகியிருப்பது பாராட்டுக்குரியது. இதற்கு இன்னும் ஒரு பக்கம் ஒதுக்கலாம் என்பது எனது ஆலோசனை. செய்தியின் ஆழத்தை வாசகர்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில், ஆங்கில டெக்னிக்கல் வார்த்தைகளை வலிந்து தமிழாக்கம் செய்யாமல் அப்படியே தமிழில் வெளியிடுவது வரவேற்கத்தக்க யதார்த்தம்.

செய்தியை முழுமையாக படிக்கத் துாண்டும் வகையில், தலைப்பில் வார்த்தைகளை கையாளும் திறன் தினமலர் நாளிதழுக்கே உரித்தானது. சில நேரங்களில் அதில் ரசிக்கும்படியான நையாண்டியும் இருக்கும். அண்மையில் நான் ரசித்த அத்தகைய தலைப்பு, 'சாலைகளை சேதப்படுத்தி 3 நாளுக்கு கொடி கட்டலாம் - அனுமதி தர போலீசுக்கு அரசு உத்தரவு'.

75 ஆண்டு நிறைவு பவளவிழா கொண்டாடும் தினமலர், காலத்திற்கேற்ப பல்வேறு பரிணாமங்களில் வளர்ச்சி பெற்று, அதன் பணி தமிழிருக்கும் வரை தொடரவேண்டும் என என் சார்பாகவும், நான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.

-எஸ்.ரத்தினவேல்,

நிறுவனர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்,

வேளாண் உணவு வர்த்தக மையம், மதுரை

தலைவர், அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us