தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/ சமூகத்தின் மனச்சாட்சி 'தினமலர்'

சமூகத்தின் மனச்சாட்சி 'தினமலர்'

சமூகத்தின் மனச்சாட்சி 'தினமலர்'


PUBLISHED ON : மார் 14, 2026 12:05 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 14, 2026 12:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''ஈசன் அருளால் எழுத்தாளர் ஒத்துழைப்பால், வாசகரின் ஆசி வலிமையால், பேசுபுகழ் தென்னனந்தை பூத்த, 'தினமலர்' வாடாது, மன்னுகவே எந்நாளும் வாழ்ந்து'' என்று முதல் பக்கத்தில், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எழுதிய வாழ்த்து பாடலுடன், 1951ம் ஆண்டு செப்.,6ம் தேதி கன்னியாகுமரி மண்ணில், சுதந்திரப் போராட்ட வீரர் டி.வி.ராமசுப்பையரால் விதைக்கப்பட்ட தினமலருக்கு, இப்போது, 75 வயது.

நடுநிலைமை தவறாதது; உண்மைக்கு முதலிடம்; பொறுப்பை உணர்ந்து செய்திகளை வெளியிடுவது; விருப்பு வெறுப்பின்றி செயல்படுவது; ஒருதலைபட்சமாக இல்லாமல், அனைத்து தரப்பு நியாயங்களையும் எடுத்து சொல்வது; தேச நலனிற்கு முன்னுரிமை; மக்கள் ஆட்சி ஜனநயாகத்தை காப்பது என, இன்றைய சமூகத்தின் மனசாட்சியாக செயல்படுவது தினமலர் ஆகும். தமிழ் மக்களின் வாழ்வில், இரண்டற கலந்திருப்பது தினமலர் நாளிதழ் என்று சொன்னால் மிகையாகாது.

தினசரி நாளிதழாக வெளிவரும் ஒரு பத்திரிகை, எத்தனை விதமாக செயல்பட முடியும். தினமலரை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

அனைத்து விதமான முக்கிய செய்திகள். நேர்மையான சினிமா விமர்சனங்கள் (பலர் தினமலர் விமர்சனங்களை பார்த்த பின் தான் படம் பார்க்கவே செல்கின்றனர்). பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் உள்ளிட்ட வணிக செய்திகள். பல திரைமறைவு வேலைகளை, மக்களுக்கு சூசகமாக எடுத்து செல்லும் டீ கடை பெஞ்ச். கருத்து சொல்பவர்களையே கலாய்க்கும் டவுட் தனபாலு. தேசிய அளவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களை பற்றிய 'டில்லி உஷ்...'. விளையாட்டு செய்திகளில் உள்ளூர் விளையாட்டையும் விடுவதில்லை. இப்படி என்ன இல்லை தினமலரில் என்று சிந்திக்க தோன்றும் பத்திரிகை தினமலர்.

முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை, முழுதுமான வார இதழை போல், வாரமலர் வெளிவந்து கொண்டிருக்கிறது. வாரமலரில், அட்டகாசமான, கேலியும், கிண்டலும் நிறைந்த அந்துமணி பதில்கள். குடும்ப ரீதியாக பிரச்னைகளுக்கு தீர்வு கூறும் 'அன்புடன் அந்தரங்கம்'. எல்லாவற்றையும் விட, பார்த்தது, கேட்டது, படித்தது பகுதி மிகச்சிறப்பு.

75 ஆண்டுகள் பயணித்து, மக்களுக்கு பல்வேறு நிலைகளில் சேவை ஆற்றி, அன்றாடம் மலரும் தினமலர், எந்நாளும் நிற்பது கிடையாது. புயல், மழை, வெள்ளம் நிறைந்த காலங்களில் கூட, தனது சேவையை நிறுத்தியது கிடையாது. அதிகாரத்திற்கும், பணபலத்திற்கும் கூட அடிபணியாமல், நெற்றிக்கண் திறப்பினும், குற்றம் குற்றமே என்பது போல், செய்திகளை வெளியிட்டு வருகிறது தினமலர்.

தினமலர் ஒரு பத்திரிகை மட்டும் அல்ல. தமிழகத்தின் குரல். நம் பாரம்பரியம், கலாசாரத்தின் கண்ணாடி. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், பஹல்காம், ஆப்ரேஷன் சிந்துார் போன்ற தாக்குதல்களை, முழுதுமாக சிறப்பாக வெளியிட்டு, நம் மக்களுக்கு தேச உணர்வை தந்த, தேசிய உணர்வு கொண்ட நாளிதழ் தினமலர். அரசின் நல்ல செய்திகளை ஆதரிப்பதோடு, தவறுகளையும் சுட்டிக்காட்ட தவறாத பத்திரிக்கை தினமலர்.

தினமலரின் இன்றைய தேசிய உணர்வுகளுக்கு விதை போட்டவர், தினமலர் நிறுவனர் ஐயா டி.வி.ஆர்., என, மக்களால் போற்றப்பட்ட டி.வி.ராமசுப்பையர். நாடு சுதந்திரம் பெற போராடியவர். குமரி மாவட்டத்தை, தமிழகத்தோடு இணைப்பதற்கு பாடுபட்டவர். ஐயா தானுலிங்க நாடார், மார்ஷல் நேசமணி நாடார் போன்ற தலைவர்களோடு இணைந்து தீவிரமாக செயல்பட்டவர். டி.வி.ஆர்., ஏற்றி வைத்த தினமலர் எனும் கலங்கரை விளக்கம், சுடர் ஒளி பாய்ச்சி மக்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தினமலருக்கு 75 ஆண்டு, 80 ஆண்டு என்ற இலக்கு ஒரு பொருட்டல்ல. ஏனெனில் இந்த பத்திரிகை, மக்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஏது வயது. தமிழகத்திற்காக நம் தேசத்திற்காக, தினமலரின் சேவை தொய்வின்றி தொடர வேண்டும். உண்மையின் ஒளியாய், தமிழரின் பெருமையாய் என்றும் மிளிர்க தினமலர். இந்த, 75வது ஆண்டு பவள விழா என்பது, கடந்து வந்த பாதையின் வெற்றி மட்டுமல்ல. வரப்போகும் நுாற்றாண்டு சாதனைகளுக்கான தொடக்கமுமாகும்.

தேசியம், தெய்வீகம் மற்றும் தமிழ் மொழிப்பற்றுடன் தினமலர் தனது பயணத்தை, தொய்வின்றி தொடரவும், இன்னும் பல மைல் கற்களை கடந்து, வெற்றி சிகரத்தை அடையவும், மீண்டும் மனமாற வாழ்த்துகிறேன்.



கரு.நாகராஜன்

மாநில துணைத் தலைவர், பா.ஜ.,



***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us