தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/பாரபட்சம் இல்லாத ஒரே நாளிதழ்!

பாரபட்சம் இல்லாத ஒரே நாளிதழ்!

பாரபட்சம் இல்லாத ஒரே நாளிதழ்!


PUBLISHED ON : மார் 03, 2026 01:27 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2026 01:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செய்திகளில் நேர்மை, தைரியம், பாரபட்சமின்மை ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் ஒரே நாளிதழ் தினமலர். உள்ளதை உள்ளபடியே சொல்கிறது.

எங்கள் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள், தினமும், நான்கு பக்கங்களில் வருவது சிறப்பானது. காஞ்சிபுரத்தில், மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, தீர்வு காண்பதில் தினமலர் முதலிடம் வகிக்கிறது. அதே போல், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை வெளிச்சம்போட்டு காட்டி, அவற்றையும் சீர் செய்ய வழி செய்கிறது.

தொழில் மற்றும் ஷேர் சம்பந்தப்பட்ட செய்திகள் எங்கள் தொழில் பெருகுவதற்கு உறுதுணையாக உள்ளன. டீக்கடை பெஞ்சும் இது உங்கள் இடமும் சிறப்பானவை. சிந்தனைக் களம் பகுதியில் வரும் கட்டுரைகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன.

தினமலர், கல்விக்கு சேவை செய்யும் விதமும், மாணவர்களின் வருங்காலம் மீதான அக்கறையும் மிகவும் பாராட்டுக்குரியது. மேலும் குறிப்பிட வேண்டிய விஷயம், சனாதன தர்மத்திற்கு உயிர் ஊட்டுக்கிறது தினமலர். இதுவும் பாராட்டுக்குரியது.

விளம்பரதாரர்களுடனான உறவில் தனித்துவம் படைத்தவர்கள் தினமலர் ஊழியர்கள். தினமலர் மென்மேலும் தழைத்து வளர பாடுபடும் அவர்களும், பிற பணயாளர்களும், ஆசிரியர்களும் தினமலரின் மறைமுக கதாநாயகர்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனமுவந்த வாழ்த்துகள்.

பவளவிழா கொண்டாடும் தினமலர் நாளிதழ் இன்னும் ஓங்கி ஆலமரம் போல வளர்ந்து, பல்லாண்டு சேவை செய்து பட்டிதொட்டியெல்லாம் பரவ, எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்.

நான் எப்படி ஒருநாளும் டீ அருந்தாமல் இருப்பதில்லையோ, அது போல, ஒரு நாளும் தினமலர் படிக்காமல் விடுவதில்லை. 30 ஆண்டுகாலமாக தினமலர் வாசகன் என்பதை கூறிக்கொள்ள பெருமிதம் அடைகிறேன். தினமலரின் வளர்ச்சியை ஒவ்வொரு நிலையிலும் பார்த்து மகிழ்பவர்களில் நானும் ஒருவன்.

பி.எம். பாரஸ்மல்

நிறுவனர், பி.எம். சில்க்ஸ், காஞ்சிபுரம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us