PUBLISHED ON : ஏப் 29, 2026 12:00 AM

'தினமலர்' எமது குடும்பத்தில் ஓர் உறுப்பினர்!
நாம் சில பொருட்களை பயன்படுத்துவதால், கையில் வைத்திருப்பதால் நமக்குள் ஏற்படும் பெருமையும் பெருமிதமும் நம் சொந்த எண்ணங்களைப் பொறுத்தது. அதுவே சமூக அந்தஸ்தின் அடையாளமாக காணப்பெறின், எவ்வாறான மகிழ்ச்சியைத் தரும். அத்தகைய மகிழ்ச்சியை தினமலர் வாசகராக, 35 ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
ஜனநாயகத்தின் நான்கு துாண்களான சட்டங்களை இயற்றும் நாடாளுமன்றம், அச்சட்டங்களை அமல்படுத்தும் நிர்வாகத்துறை, அச்சட்டங்களை நிலைத்துவத்தோடு, நீதி பரிபாலனை செய்யும் நீதிமன்றம், பத்திரிகை மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றில் முதல் மூன்றுடன் நேரடியாக மக்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர். அம்மக்களுக்காகவே மற்ற மூன்று பிரிவினர்களையும் கேள்வி கேட்கும் இடத்திலும், அக்கேள்விகளால் சாமானியர்களின் வாழ்வில் நேர்மறை மாற்றங்களை உருவாக்கிடும் ஒப்பற்ற பணிகளை செய்து வரும் நான்காவது துாண் மிக முக்கியம். அதிலும், சமரசம் செய்து கொள்ளாமல் நீதி, நேர்மை, நியாயம் மற்றும் தர்மத்துடன் நடந்து கொள்வது என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான்.
எந்த சிக்கலிலோ, குறிப்பிட்ட குழுவினர்களின் சிக்னலிலோ இல்லாமல், எப்போதும் என் வழி; தனி வழி என மக்களின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி என்பதை குறிக்கோளாகக் கொண்டு ஜனநாயகத்தின் நான்காவது துாணின் கடமையை மிகச்சரியாக செய்து கொண்டிருக்கும் தினமலர் நாளிதழை பாராட்டினால் எமக்கும் பெருமை.
கல்வி, அறிவியல், விவசாயம், மருத்துவம், தொழில்நுட்பம், தமிழ் மொழி, தேசம் என தினமலர் பங்களிப்பு அளப்பரியது. மாற்றங்களை ஏற்றுக் கொள்வது வளர்ச்சியின் ஒரு பங்கு என்பதைப்போல், தேவையான மாற்றங்களை மேற்கொள்ள முயற்சிப்பதும் வளர்ச்சிக்கான அடிப்படை என்பதில் தினமலர் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட துறைகளின் வளர்ச்சி சார்ந்து தினமலர் வெளியிட்டு வரும் செய்திகள், அவ்வப்போது நடத்தி வரும் நிகழ்ச்சிகள், பயிற்சி பட்டறைகள் என தினமலர் தன் பங்களிப்பில் எப்போதும் தவறியதில்லை.
மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்கள் குறித்த மக்களின் புரிதல் குறைபாடுகளை களைவதிலும், அத்திட்டங்கள் மக்களை சென்றடைந்து அரசுகளின் நியாயமான சேவைகள் மக்களை சென்றடைவதிலும் தினமலர் செயல்பாடுகள் அலாதியானது.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வைக்கு இலக்கணமாய் வீறு நடை போடும் தினமலர் 75வது ஆண்டு கொண்டாட்டத்தோடு, ஆயிரம் ஆயிரம் ஆண்டு, மக்கள் பணியாற்றி, மொழிப் பணியாற்றி, தேசப் பணியாற்றி, சீரோடும் சிறப்போடும் தொடர்ந்து வளர வேண்டுமாய் எமது குலதெய்வம் முத்தணம்பாளையம் அங்காளம்மன், பழனி ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிகளை வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்
எஸ்.ஏ.ராதாகிருஷ்ணன்நிறுவனர் மற்றும் சேர்மன்சுப்ரீம் மொபைல்ஸ், சுப்ரீம் எலக்ட்ரானிக்ஸ், சுப்ரீம் பேரடைஸ்திருப்பூர் மற்றும் தமிழகமெங்கும்.
