/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
'51 ஆண்டுகளாக பயன் பெற்று வருகிறோம்'
/
'51 ஆண்டுகளாக பயன் பெற்று வருகிறோம்'
PUBLISHED ON : ஜன 08, 2026 12:00 AM

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்ற திருக்குறள், மணலில் கிணற்றை தோண்டும் அளவுக்கு நீர் ஊறும் என்பது போல, மனிதர்களின் அறிவும் அவர்கள் கற்கும் அளவிற்கு உயரும் என்று கூறுகிறது. இந்த குரளின் வார்த்தைக்கு ஏற்ப, ஒருவர் 'தினமலர்' நாளிதழை தினந்தோரும் படித்தால், அதிலிருந்து புதுப்புது தகவல்களை தெரிந்துகொண்டு அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்.
75 ஆம் ஆண்டில் காலடி பதிக்கும் தினமலர், பெருமையுடன் கம்பீரமாய் உயர்ந்து நிற்கிறது. ஆனால், பின்புலத்தில், எவ்வளவு பிரச்னைகளை கண்டுள்ளது என்பது தினமலர் நிர்வாகிகளுக்கே தெரியும். விவேகானந்தரின் கூற்றின்படி வெற்றியாளர்களின் முன்புறத்தை பார்த்து பெருமைப் படும் நாம், அவர்களின் மற்றொரு புறத்தையும் பார்த்து, அவர்கள் அனுபவங்களை பாடங்களாக கற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த 51 ஆண்டுகளாக, 'பிரீமியர்' முத்திரையில் தரமான வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து வரும் எங்களது 'எஸ்.எஸ்.பிரீமியர்' நிறுவனம், துவங்கிய நாள் முதல் தினமலரில் விளம்பரம் செய்து, இன்றுவரை பயன் பெற்று வருகிறோம்.
தரமான வாசகர்களை சரியான நேரத்திற்கு சென்றடைவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல! அதுவும் தினம் தோரும்! அந்த கடினமான காரியத்தை, தினமலர், கடந்த 75 ஆண்டுகளாக தொடர்ச்சியாக செய்து வருவதை நாம் அனைவரும் பாராட்டியே தீரவேண்டும்!
எங்கள் நிறுவனம், மக்களின் தேவை அறிந்து, புதுப்புது தயாரிப்புகளை லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தில் தயாரித்து வருவது போல, தினமலர் நிறுவனமும், புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி செய்திகளை எளிமையாக தெரிந்து கொள்ள வசதிகளை செய்துள்ளது. 'கியு.ஆர்., கோட்' வழியாக முழுமையான செய்திகளை தெரிந்து கொள்ளும் வசதி, மொபைல் செயலி வழியாக உடனடி செய்திகள், இணையதளம் வழியாக உலகத்தின் மொத்த செய்திகளையும் தெரிந்து கொள்ளும் வசதி ஆகியவை தினமலரின் சிறப்பு.
பிரீமியர் தயாரிப்பில், குக்கர், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் எப்படி வகை வகையாக உள்ளதோ, அது போன்று, தினமலர் நாளிதழிலும் செய்திகள், உலகம், தேசியம், தமிழகம், தொழில் என வெவ்வேறு பக்கங்களில் அழகழகாக வகைப் படுத்தப்பட்டு வெளியாகின்றன.
மக்களுக்கும் வணிகர்களுக்கும் பக்கபலமாக செயல்பட்டு வரும் தினமலர், நூற்றாண்டுகளை கடந்து மென்மேலும் வளர பிரீமியர் நிறுவனத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்!
எஸ். சிவநேசன்
தலைவர், சிவநேசன் குழுமம்

