sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தினமலர் பவள விழா

/

நல்லதை சொல்வோம் சொன்னதை செய்வோம்

/

நல்லதை சொல்வோம் சொன்னதை செய்வோம்

நல்லதை சொல்வோம் சொன்னதை செய்வோம்

நல்லதை சொல்வோம் சொன்னதை செய்வோம்


PUBLISHED ON : அக் 02, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 02, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் என்ற பெயர் புதிதாக இருக்கலாம். ஆனால் திட்டத்துக்கான பரிந்துரை செய்தபின் கால் நூற்றாண்டு கடந்த பின்னரும் எந்த அரசும் துரும்பைக்கூட கிள்ளிப்போட முன்வரவில்லை.

திட்டம் வரும் வரை தினமலர் ஓயாது! என்று கொங்கு மண்டல மக்களுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு களத்தில் இறங்கியது தினமலர். நடக்குமா என்று கேட்டவர்கள் சிலர். சிரித்தவர்கள் பலர். அவர்களை கண்டுகொள்ளவே இல்லை நமது நாளிதழ். தண்ணீர்... கண்ணீர்... என்ற தலைப்பிட்டு, இத்திட்டத்தின் பின்னணியையும் போராட்டத்தையும் கொங்கு மக்களின் பொங்கும் உணர்வுகளையும் புத்தக வடிவில் தொகுத்து, பல்லாயிரக்கணக்கில் தமிழகம் எங்கும் வினியோகித்தது தினமலர்.

அதுவரை ஒதுங்கி நின்று அவநம்பிக்கையுடன் வேடிக்கை பார்த்த அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும் வேறு வழியில்லாமல் விழித்துக் கொண்டு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தை அந்த புத்தகம் உருவாக்கியது.

அதன் விளைவாக கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 1,045 ஏரி குளங்களில் பவானியின் உபரி நீரை நிரப்பி 25,000 ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதி கிடைக்க வழி கிடைத்தது, சமீபத்திய போராட்ட வரலாறு.






      Dinamalar
      Follow us