/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
நான் சிறுவர் மலரை தேடிய ஆர்வத்துடன் இன்றைய குழந்தைகள் ‛தினமலர் - பட்டம்' தேடுகின்றனர்

PUBLISHED ON : அக் 21, 2025 12:00 AM

எனது அப்பா ‛தினமலர்' நாளிதழின் தீவிர வாசகராக இருந்ததால், சிறுவயதில் ஓர் உறவினர் அறிமுகம் போலவே தினமலர் அறிமுகம் எனக்கு அமைந்தது.
பள்ளி செல்வதற்கு முன்பாக சிறுவர்மலரில் வரும் சின்னச்சின்ன கதைகளை வாசித்து, அதை பள்ளியில் தோழிகளிடம் பகிர்ந்து கொள்வதில் எனக்கு பெரிய சந்தோஷம். நான் வளர வளர சிறுவர் மலரின் இடத்தை வாரமலர் எடுத்துக் கொண்டது. அந்த வயதில், அந்துமணியின் கேள்வி பதில், பார்த்தது கேட்டது படித்தது விருப்பமானதாக இருந்தது.
எளிய மனிதர்களின் சாதனைகளை அதிகமான மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தினமலர் நாளிதழின் வீச்சு பிரமாண்டமானது!
எனக்கு கிடைத்த அங்கீகாரம் ஒன்றை ‛தினமலர் - கண்ணம்மா' பேசிய பின்புதான் நான் தமிழகம் முழுமைக்கும் தெரிந்தவளானேன். அதன்மூலம் நான் பெற்ற பாராட்டுகள் தினமலர் நாளிதழின் மக்கள் செல்வாக்கை எனக்கு உணர்த்தியது!
நான் சிறுவர் மலரை தேடிய அதே ஆர்வத்துடன் இன்று நான் பணிபுரியும் பள்ளி மாணவர்கள், ‛தினமலர் - பட்டம்' இதழை தேடி வாசிக்கின்றனர். இந்த தொழில் நுட்ப யுகத்தில், மாணவர்களை ஈர்க்கும் வகையிலான கருத்துக்களோடு நிறைவான வாசிப்பு அனுபவம் தருகிறத. பட்டம்.
அடுத்த தலைமுறைக்கு வாசிப்பு பழக்கத்தை விதைக்கும் தினமலர் நாளிதழின் ‛பவள விழா'விற்கு என் வாழ்த்துக்கள்.
ஜெ. யுவராணி,
இடைநிலை ஆசிரியை, கோவை.