/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தேவகோட்டைக்கு 21,500 பாக்கெட் பாமாயில்; தினமலர் செய்தி எதிரொலி
/
தேவகோட்டைக்கு 21,500 பாக்கெட் பாமாயில்; தினமலர் செய்தி எதிரொலி
தேவகோட்டைக்கு 21,500 பாக்கெட் பாமாயில்; தினமலர் செய்தி எதிரொலி
தேவகோட்டைக்கு 21,500 பாக்கெட் பாமாயில்; தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : மே 16, 2024 12:00 AM

சிவகங்கை, : தினமலர் செய்தி எதிரொலியால் முதற்கட்டமாக தேவகோட்டை பகுதி ரேஷன் கடைகளுக்கு 21,500 பாக்கெட் பாமாயில் அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது.
தமிழக அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 829 ரேஷன் கடைகளுக்கு மாதந்தோறும் மானிய விலையில் துவரம்பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வினியோகம் செய்து வருகிறது.
மே மாதத்திற்குரிய துவரம்பருப்பு 274 டன், பாமாயில் 3.76 லட்சம் பாக்கெட் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. மே மாதம் 15 நாட்களுக்கு மேலாகியும் இப்பொருட்கள் ரேஷனில் வினியோகம் செய்யப்படாததால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வருவதாக தினமலரில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக முதற்கட்டமாக தேவகோட்டை தாலுகாவிற்கு 21 ஆயிரத்து 500 பாக்கெட் பாமாயில் ஒதுக்கியுள்ளது. படிப்படியாக அரசிடமிருந்து துவரம் பருப்பு, பாமாயில் பாக்கெட் வந்ததும் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.