/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
சரிந்து விழும் நிலையில் இருந்த மின்கம்பம் உடனடியாக சீரமைப்பு: தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : ஏப் 27, 2024 12:00 AM

திண்டிவனம் : தினமலர் செய்தி எதிரொலியால், சரிந்து விழும் நிலையில் இருந்த மின்கம்பம் சீர் செய்யப்பட்டது.
திண்டிவனம் மருத்துவமனை செல்லும் சாலையில், பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி, செரித்து கீழே விழும் நிலையில் இருந்தது. இதுபற்றி அந்தப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் மின்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும், சீர் செய்யப்படாமல் இருந்தது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன், தினமலர் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதுபற்றி மின்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இதை தொடர்ந்து சரிந்து விழும் நிலையிலுள்ள மின்கம்பத்தை தாங்கி பிடிக்கும் அளவில் அடிப்பகுதியில் இரும்பு ராடு வைத்து வெல்டிங் செய்து, உறுதிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.