/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
சிவில் சப்ளை குடோனில் சுற்றுச்சுவர் கட்டும் பணி; 'தினமலர்' செய்தி எதிரொலியாக

PUBLISHED ON : ஜூலை 12, 2024 12:00 AM

வால்பாறை : வால்பாறையில் சிவில் சப்ளை குடோனில், 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது.
வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக (சிவில் சப்ளை) குடோன் அமைந்துள்ளது. வால்பாறையில் உள்ள ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்களுக்கு இந்த குடேனில், அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்கள் இருப்பு வைத்து, மாதம் தோறும் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சிவில் சப்ளை குடோனின் முன் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனால், சிவில் சப்ளை குடோனுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் பல முறை செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, கடந்த ஒரு வாரமாக குடோன் முன் பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது. சுற்றுச்சுவர் கட்டப்படுவதால், சிவில்சப்ளை ஊழியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.