/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
சேதமான மின்கம்பம் அகற்றம் புதிதாக அமைத்ததால் மகிழ்ச்சி
/
சேதமான மின்கம்பம் அகற்றம் புதிதாக அமைத்ததால் மகிழ்ச்சி
சேதமான மின்கம்பம் அகற்றம் புதிதாக அமைத்ததால் மகிழ்ச்சி
சேதமான மின்கம்பம் அகற்றம் புதிதாக அமைத்ததால் மகிழ்ச்சி
PUBLISHED ON : மே 12, 2024 12:00 AM

அச்சிறுபாக்கம்:தொழுப்பேடு துணை மின் நிலையத்திலிருந்து, கடமலைப்புத்துார் பகுதிக்கு மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு கம்பத்தில் இருந்து, வீட்டிற்கு தேவையான மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
இக்கம்பத்தில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் இருந்தன. ஓராண்டுக்கும் மேலாக மின்கம்பம் சேதமடைந்து உள்ளது.
இதுகுறித்து மின்வாரிய துறையினருக்கு பலமுறை புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், மின்கம்பம் அமைந்துள்ள பகுதியில், பனை ஓலையால் வேயப்பட்ட குடிசை வீடு உள்ளது.
காற்றடிக்கும் நேரங்களில், மின் ஒயர்கள், ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறியும் ஏற்படுகிறது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, நேற்று மின்வாரிய துறையினர் சேதமான மின் கம்பத்தை அகற்றி, புதிதாக மின்கம்பம் அமைத்து, மின் இணைப்பு ஏற்படுத்தினர்.