/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி: பார்வையற்ற கிரிக்கெட் வீரருக்கு அமைச்சர் ரூ.1.20 லட்சம் உதவி

PUBLISHED ON : ஜூலை 19, 2024 12:00 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி, மாவட்டம் விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கே. துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் மகாராஜா, 26, பார்வையற்றவர். இவர், இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார். இடது கை பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளரான மகாராஜா, இங்கிலாந்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த உலக போட்டியில் இடம்பெற்றிருந்தார். அந்த போட்டியில், இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.
இந்நிலையில், அமெரிக்காவில் ஜூலை 25ம் தேதி தொடங்கும் இரண்டு மாத பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்ட அவர், அதற்கான நிதி இல்லாமல் தவித்து வந்தார். இதுதொடர்பான செய்தி, நமது நாளிதழில், கடந்த 16ல் வெளியானது.
இதையடுத்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, நேற்று முன்தினம் மகாராஜாவை அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும், விளையாட்டுத் துறையின் கீழ் செயல்படும், சாம்பியன்ஸ் பவுண்டேஷன் மூலம், வீரர் மகாராஜாவின் பயிற்சிக்காக, 1.20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மகாராஜாவிடம் உதயநிதி வழங்கினார்.
அப்போது மகாராஜாவின் தாய் சண்முகத்தாய் உடனிருந்தார்.
இதுகுறித்து, பார்வையற்ற கிரிக்கெட் வீரர் மகாராஜா கூறியதாவது:
அமெரிக்காவில் நடக்கும் பயிற்சியில் கலந்து கொள்ள தேவையான, 1.20 லட்சம் ரூபாயை அமைச்சர் உதயநிதி வழங்கியுள்ளார். விளையாட்டு பிரிவுக்கான அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும்படியும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.