/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி: வண்டலுார் - --மீஞ்சூர் சாலையில் சீமை கருவேல மரங்கள் அகற்றம்

PUBLISHED ON : மே 17, 2024 12:00 AM

பூந்தமல்லி, நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, வண்டலுார் - --மீஞ்சூர் வெளிவட்ட சாலையின் இடைவெளி பகுதியில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
சென்னை- - -திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தென்மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் சென்னைக்கு வருகின்றன.
இதில், 30 சதவீத வாகனங்கள் பெங்களூரு, கொல்கட்டா ஆகிய இடங்களுக்குச் செல்கின்றன.
இந்த வாகனங்கள் சென்னைக்குள் நுழைவதை தடுக்க, வண்டலுார் - --மீஞ்சூர் இடையே வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலையின் நடுவே எதிர்காலத்தில் ரயில் போக்குவரத்திற்காக, 20 அடி அகலத்திற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த பகுதியில், சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
இந்த மரங்களை அகற்றி வேம்பு, நாவல் உள்ளிட்ட நாட்டு வகை மரங்களை நடவு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து நம் நாளிதழில் கடந்த 13ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை முதல் குன்றத்துார் வரை இடைப்பட்ட பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை, 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக அகற்றும் பணி நடந்து வருகிறது.
மேலும், வனத்துறையுடன் இணைந்து, நாட்டு வகை மரங்களை நடவும் திட்டமிட்டுள்ளதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.