/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி: நீர்தேக்க தொட்டி இடிப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி: நீர்தேக்க தொட்டி இடிப்பு
PUBLISHED ON : ஜூன் 14, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை தீனதயாளன் நகரில் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி இருந்தது.
அந்த தொட்டியை தாங்கி நிற்கும் துாண்கள் அனைத்தும் விரிசல் கண்டு எந்த நேரத்திலும் தொட்டி இடிந்து விழும் ஆபத்தான சூழல் நிலவியது.
மக்களின் பாதுகாப்பு கருதி அந்த தொட்டியை இடிக்க வேண்டும் என நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் நேற்று அந்த தொட்டி இடிக்கப்பட்டது.