/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
‛தினமலர்' செய்தி எதிரொலி பழுதான மின்கம்பம் மாற்றம்
/
‛தினமலர்' செய்தி எதிரொலி பழுதான மின்கம்பம் மாற்றம்
‛தினமலர்' செய்தி எதிரொலி பழுதான மின்கம்பம் மாற்றம்
‛தினமலர்' செய்தி எதிரொலி பழுதான மின்கம்பம் மாற்றம்
PUBLISHED ON : செப் 22, 2024 12:00 AM
திருத்தணி:திருத்தணி நகராட்சி, 16வது லட்சுமணன் தெருவில், 70க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, மின்கம்பங்கள் அமைத்து வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மழைநீர்வடிகால் வாய் அமைக்கும் போது, மின்கம்பம் மாற்றி அமைக்காமல் கால்வாய் போட்டதால், மழைநீர், கழிவுநீர் சென்றதால் மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்து உடைந்து விழும் அபாய நிலையில் இருந்தது. இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.
இதையடுத்து நேற்று 10க்கும் மேற்பட்ட மின்ஊழியர்கள் கால்வாய் நடுவில் பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி மாற்று இடத்தில் புதிய மின்கம்பம் அமைத்தனர்.