/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
கலெக்டர் அலுவலகத்தில் வழிகாட்டி பலகை திருத்தம் தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : மே 29, 2024 12:00 AM

தேனி, : தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசுதுறை அலுவலகங்களுக்கு செல்ல வழிகாட்டும் பலகை தவறுதலாக இருந்தது.
இதனை சுட்டிகாட்டி நமது தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து வழிகாட்டி பலகை திருத்தம் செய்யும் பணி துவங்கியது.
தேனி கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் அரசுத்துறை அலுவலகங்களுக்கு செல்வதற்கு வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பலகையில் குறிப்பிட்டிருந்த சில அலுவலகங்கள் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டன. அலுவலக வழிகாட்டி பலகையில் சம்மந்தப்பட்ட அலுவலகம் குறிப்பிட்ட அறைகளில் செயல்படுவதுபோல் குறிப்பிடப்பட்டிருந்தது.
வழிகாட்டி பலகையில் அலுவலகங்கள் தவறுதலாக குறிப்பிட பட்டுள்ளது பற்றியும், பொதுமக்கள் வழிதெரியாமல் தவிப்பதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
செய்தி எதிரொலியாக வழிகாட்டி பலகையில் அலுவலக எண்கள் திருத்தும் பணி நேற்று நடந்தது. மேலும் வழிகாட்டி பலகையை பொதுமக்கள் பார்வையில் படும்வகையில் வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.