/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
குப்பை மேடான புழுதிவாக்கம் வீராங்கல் ஓடை நீர்வளத்துறை, மாசு வாரியத்திற்கு நோட்டீஸ் தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : மே 28, 2024 12:00 AM

சென்னை,
புழுதிவாக்கம் வீராங்கல் ஒடை, புதர் மண்டி குப்பை மேடாகியுள்ளது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக நீர்வளத்துறை, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை புழுதிவாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை வழியாக செல்லும் வீராங்கல் ஓடையில், பல இடங்களில் புதர் மண்டி, குப்பை மேடாக மாறி உள்ளது. ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், நங்கநல்லுார், மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளை, வெள்ள பாதிப்பிலிருந்து தடுக்கும் அரணாக இந்த ஓடை உள்ளது.
வேளச்சேரி, பாலாஜி நகர் அருகே வீராங்கல் ஓடையில் குப்பை, கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு, ஓடையின் அகலம் 2 அடி குறுகியுள்ளது. இதனால், மழைக் காலங்களில் வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
'வீராங்கல் ஏரி புதர் மண்டி, குப்பை மேடானது குறித்து நாளிதழ்களில் வெளியான செய்தியின் நகலுடன் தமிழக நீர்வளத்துறை, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
இது தொடர்பாக அவர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, மே 30க்கு தள்ளி வைத்தனர்.