sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

மேடவாக்கம் சாலைக்கு விமோசனம் ஆக்கிரமிப்பு வாகனங்கள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

/

மேடவாக்கம் சாலைக்கு விமோசனம் ஆக்கிரமிப்பு வாகனங்கள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

மேடவாக்கம் சாலைக்கு விமோசனம் ஆக்கிரமிப்பு வாகனங்கள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

மேடவாக்கம் சாலைக்கு விமோசனம் ஆக்கிரமிப்பு வாகனங்கள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி


PUBLISHED ON : மே 01, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 01, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேடவாக்கம், தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில், மேடவாக்கம் மும்முனை சந்திப்பில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அங்கு இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டு 2022ல் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.

இதில், மடிப்பாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலிருந்து வேளச்சேரி சாலைக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் தாம்பரம், சேலையூர், கவுரிவாக்கம் உள்ளிட்ட இடங்களிலிருந்து மாடம்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிக்கு சென்று வரக்கூடிய வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில் பயணிக்க வேண்டும்.

இடையூறு


திறக்கப்பட்ட நாளிலிருந்து, இவ்விரு மேம்பாலங்களுக்கு கீழ் உள்ள சாலையின் இரு பக்கங்களையும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள், தங்களுக்கான பார்க்கிங் பகுதியாக பயன்படுத்தி வந்தன.

பிரதான சாலையில் வலப்பக்கத்தில் வாகனங்களை நிறுத்துவது, போக்குவரத்து விதிகளுக்கு மாறானது. விபத்துக்களையும் ஏற்படுத்தக்கூடியது. இதனால், பொது மக்களுக்கான வாகன போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

தவிர, மேடவாக்கம் சந்திப்பில் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் நடப்பதாலும், இரவு நேரத்தில் வெளிச்சம் பற்றாக்குறை காரணமாகவும், வாகன ஓட்டிகள் சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகள் மீது மோதி விபத்துக்களை சந்திப்பதும் அடிக்கடி நடந்தது.

எனவே, பொது போக்குவரத்துக்கு இடையூறாக, விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாக, பாலத்தின் கீழ் நிறுத்தப்பட்டுள்ள தனியார் வாகனங்களை அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நமது நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது.

இதன் அடிப்படையில், தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம், நேற்று முன்தினம் சமூக ஆர்வலர் தினகரன், 45, புகார் அளித்தார்.

மகிழ்ச்சி


புகாரின்படி, பாலத்தின் கீழ் நிறுத்தப்பட்டுள்ள லாரிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தனியார் வாகனங்களை அப்புறப்படுத்த தாம்பரம் போலீஸ் கமிஷனர் நேற்று உத்தரவிட்டார். தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையினர், பாலத்தின் கீழ் பகுதியை சுத்தம் செய்தனர். 300 மீட்டர் நீளமுள்ள வழித்தடம் விசாலாமான சாலையாக மாறி, எளிதான பயணத்திற்கு வழிவகுத்தது.

தவிர, இந்த வழித்தடத்தில் 32 இடங்களில் 'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us