/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி கூனவயல் பிரச்னைக்கு தீர்வு
/
தினமலர் செய்தி எதிரொலி கூனவயல் பிரச்னைக்கு தீர்வு
PUBLISHED ON : ஏப் 17, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஒன்றியம் பூசலாகுடி ஊராட்சியைச் சேர்ந்தது கூனவயல் கிராமம்.
இந்த கிராமத்தில் மயானம், குடிநீர், மின்சார பிரச்னை போன்ற அடிப்படை வசதிகளுக்காக மக்கள் சிரமப்பட்டனர்.
கூனவயல் கிராமத்தில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.இது குறித்து தினமலர் இதழில் செய்தி வெளியானது. நேற்று மாலை வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசார் கூனவயலுக்கு சென்றனர்.
பிரச்னைகளை சரி செய்து தருவதாகவும், கருப்பு கொடியை அகற்ற கிராமத்தினரை கேட்டு கொண்டனர். கண்ணங்குடி ஒன்றிய பி.டி.ஓ., தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக செய்து தருவதாக உறுதியளித்தார்.

