/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
செய்தி எதிரொலி கட்டணம் செலுத்தப்பட்டதால் மீன் அங்காடிக்கு மின் இணைப்பு

PUBLISHED ON : ஆக 18, 2024 12:00 AM

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி சார்ந்து, மீன் அங்காடி உள்ளது. இந்த மீன் அங்காடியை, பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இங்கு, மீன், கருவாடு, நண்டு, இறால் உள்ளிட்ட இறைச்சி விற்பனைக்காக, 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
அங்கு, சமீபத்தில் மின்சாரம் இல்லாமல், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, பேரூராட்சி நிர்வாகம் மின் கட்டணம் செலுத்தாததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் மின் கட்டணம் செலுத்தியதை தொடர்ந்து, துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டது.