/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர், நர்ஸ் பணியிடம் தாருங்கள் தினமலர் செய்தி எதிரொலி கடிதம்

PUBLISHED ON : ஆக 05, 2024 12:00 AM

சிவகங்கை : காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் டாக்டர், நர்ஸ் பற்றாக்குறை, கட்டட வசதியில்லாதது குறித்து தினமலரில் செய்தி வெளியானதின் எதிரொலியாக, கூடுதல் டாக்டர்களை நியமிக்க கோரி கலெக்டருக்கு, மருத்துவ இணை இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார்.
காளையார்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனை மதுரை - - தொண்டி ரோட்டில் அமைந்துள்ளதால், விபத்தில் சிக்குவோர் முதலுதவி சிகிச்சை பெற, அவசர கால விபத்து சிகிச்சை பிரிவு இல்லை. டாக்டர்கள், நர்சு பற்றாக்குறை, ஆபரேஷன் தியேட்டருக்கு தேவையான 'டயத்தெர்பி', மின்விளக்கு வசதியில்லை என ஜூலை 25 அன்று 'கோமா நிலையில்' அரசு மருத்துவமனை என்ற தலைப்பில் தினமலரில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, அரசு மருத்துவமனையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க கோரி கலெக்டர் ஆஷா அஜித்திற்கு, மருத்துவ இணை இயக்குனர் ஜி.பிரியதர்ஷினி கடிதம் எழுதியுள்ளார். அதில், இங்கு 7 டாக்டர்கள் பணியிடத்திற்கு 3 பேர் மட்டுமே உள்ளனர்.
இங்கு டாக்டர்கள் காலிபணியிடங்களை நிரப்பினால் மட்டுமே அனைத்து நோயாளிகளுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும். ஆபரேஷன் தியேட்டர் வசதியுடன் அறுவை சிகிச்சை, மயக்கவியல், மகப்பேறு சிகிச்சை பிரிவு டாக்டர்களை நியமிக்க வேண்டும். மருத்துவமனைக்கு தேவையான துாய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும். பிரேத பரிசோதனை இல்லை. அதற்கென தனியாக கட்டடம் கட்டித்தர வேண்டும். ஆபரேஷன் தியேட்டருக்கு டயத்தெர்பி, போதிய மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இம்மருத்துவமனை சீராக இயங்க போதிய டாக்டர், நர்சு, துாய்மை பணியாளர், கூடுதல் கட்டட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.