/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
ஆபத்தான பாறை அகற்றம்; மக்கள் நிம்மதி: 'தினமலர்' செய்தி எதிரொலி
/
ஆபத்தான பாறை அகற்றம்; மக்கள் நிம்மதி: 'தினமலர்' செய்தி எதிரொலி
ஆபத்தான பாறை அகற்றம்; மக்கள் நிம்மதி: 'தினமலர்' செய்தி எதிரொலி
ஆபத்தான பாறை அகற்றம்; மக்கள் நிம்மதி: 'தினமலர்' செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஜூலை 04, 2024 12:00 AM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆபத்தான நிலையில் இருந்த பாறை, 'தினமலர்' செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டது.
கிணத்துக்கடவு, ஒன்றிய அலுவலக வளாகத்தில், தாலுகா அலுவலகத்தில் இருந்து ஒன்றிய அலுவலகம் செல்லும் மண் சாலையின் ஓரத்தில் இருந்த செடி மற்றும் புதர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் அகற்றம் செய்யப்பட்டு, பாதை அமைக்கப்பட்டது.
சுத்தம் செய்த இடத்தில், மேடான பகுதியில் ஆபத்தான நிலையில் பாறை இருந்தது. கீழே விழும் நிலையில் இருந்ததால் மக்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து சென்றனர்.
பாறை இருக்கும் இடத்தின் அருகாமையில் கார் மற்றும் பைக் போன்ற வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவது வழக்கம். பாறை உருண்டு விழுந்தால் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்தது. இதுபற்றி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, பாறை அகற்றப்பட்டு, அப்பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த இடத்தை சமப்படுத்தினால், வாகனங்கள் நிறுத்த வசதியாக இருக்கும் என, பொதுமக்கள் தெரிவித்தனர்.