/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
வேளாண் அலுவலகத்திற்கு இடம் தேர்வு * தினமலர் செய்தி எதிரொலி
/
வேளாண் அலுவலகத்திற்கு இடம் தேர்வு * தினமலர் செய்தி எதிரொலி
வேளாண் அலுவலகத்திற்கு இடம் தேர்வு * தினமலர் செய்தி எதிரொலி
வேளாண் அலுவலகத்திற்கு இடம் தேர்வு * தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஏப் 07, 2024 12:00 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியவளாகத்தில் வேளாண்மை அலுவலகம் மற்றும் விரிவாக்க மையம் பழமையான அபாய நிலையில் உள்ள கட்டடத்தில் செயல்படுகிறது.
1974ல் கட்டப்பட்ட இக்கட்டடங்களின் உட்புற மேற்பூச்சுக்கள் பெயர்ந்து விழுகின்றன. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக மதுரை வேளாண் இணை இயக்குனர் சுப்புராஜ் கூறியதாவது:
ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மைய புதிய கட்டடம் கட்ட ஒன்றிய வளாகத்தில்இடம் தேர்வு செய்யப்பட்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நில அளவீடு முடிவடைந்த பின் கலெக்டர் மற்றும் வேளாண்மை இயக்குனர் அனுமதி பெற்று நிதி ஒதுக்கீடுபெற்று விரைவில் பணிகள் துவங்கும். தற்போதுள்ள அலுவலகத்தில் சீரமைப்பு பணிகள் நடக்கிறது என்றார்.