/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
செய்தி எதிரொலி: திருப்போரூரில் கலெக்டர் திடீர் ஆய்வு 3 மாதத்தில் பணிகளை முடிக்க உதரவு
/
செய்தி எதிரொலி: திருப்போரூரில் கலெக்டர் திடீர் ஆய்வு 3 மாதத்தில் பணிகளை முடிக்க உதரவு
செய்தி எதிரொலி: திருப்போரூரில் கலெக்டர் திடீர் ஆய்வு 3 மாதத்தில் பணிகளை முடிக்க உதரவு
செய்தி எதிரொலி: திருப்போரூரில் கலெக்டர் திடீர் ஆய்வு 3 மாதத்தில் பணிகளை முடிக்க உதரவு
PUBLISHED ON : மே 16, 2024 12:00 AM

திருப்போரூர்,:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு விசேஷ நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோவிலுக்கு செல்லும் பிரதான வழியாக, வடக்கு குளக்கரை பகுதி உள்ளது. வாகனத்தில் வருவோர், பேருந்தில் வருவோர் இந்த வழியாகவே வருகின்றனர்.
அதேபோல், கிழக்கு குளக்கரை பகுதியில், மொட்டை அடிக்கும் மண்டபம், நான்கு கால் மண்டபம், கழிப்பறை போன்றவை உள்ளன.
வடக்கு, கிழக்கு குளக்கரையை ஒட்டி, ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகள், பக்தர்களுக்கு இடையூறாக இருந்து வருகின்றன. 30 அடி அகலத்தில் இருக்கும் வழியானது, 20 அடி அகலத்திற்கு குறைந்து உள்ளது.
கடைகளை அகற்ற வேண்டும் என, நேற்று தினமலரில் செய்தி வெளியானது. அதன் விளைவாக, கலெக்டர் அருண்ராஜ், நேற்று வடக்கு குளக்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்பு கடைகளை உடனே அகற்ற உத்தரவிட்டார்.
அதேபோல், திருவஞ்சாவடி தெரு, கெங்கையம்மன் கோவில் அருகே உள்ள நல்லான்செட்டிகுளம் சீரழிந்த நிலையில் உள்ளது குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
அங்கும் ஆய்வு செய்த கலெக்டர், கோவில் இடத்தில் கூடுதல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும், மூன்று மாதங்களில் குளத்தை சீரமைக்கவும், பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, சப்- - கலெக்டர் நாராயணசர்மா, ஹிந்து அறநிலையத்துறை செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், கோவில் செயல் அலுவலர் குமரவேல், மண்டல துணை தாசில்தார் ஜீவிதா உட்பட பலர் இருந்தனர்.