/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
செய்தி எதிரொலி பயன்பாடற்ற கழிப்பறை இடிப்பு
/
செய்தி எதிரொலி பயன்பாடற்ற கழிப்பறை இடிப்பு
PUBLISHED ON : மார் 15, 2025 12:00 AM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்குட்பட்டு கூடலுார் ஊராட்சி உள்ளது.
இங்குள்ள அம்பேத்கர் நகர் பகுதி, அங்கன்வாடி மையம் அருகே மகளிர் பயன்பாட்டிற்காக, 12 ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.
தற்போது பயன்பாடின்றி, பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது.
அதனால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தங்குமிடமாக உள்ளது.
சுகாதார வளாகத்தின் 'செப்டிக் டேங்க்' மூடப்படாமல், திறந்து உள்ளது.
அங்கன்வாடி மையம் அருகே உள்ளதால், அசம்பாவிதம் ஏற்படும் முன், மகளிர் சுகாதார வளாகத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்படி, பயன்பாடற்ற மகளிர் சுகாதார வளாகத்தை இடித்து அகற்றும் பணி துவங்கி உள்ளது.