/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
கால்வாயை ஆக்கிரமித்த 27 கடைகளுக்கு நோட்டீஸ்: தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : மே 18, 2024 12:00 AM

தேனி : தேனி கலெக்டர் அலுவலக ரோட்டில் கழிவு கால்வாய் இடத்தை ஆக்கிரமித்துள்ள 27 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் ரோட்டில் தெற்கு பகுதியில் மட்டும் நகராட்சி கழிவுநீர் செல்ல சாக்கடை அமைத்திருந்தனர். மறுபுறம் சாக்கடை அமைக்கவில்லை. கழிவுநீர் ரோட்டில் ஓடி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்திவெளியானது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் மீண்டும் கழிவு நீர் ரோட்டில் ஆறாக ஓடியது.
கழிவு நீர் எதிர்புறம் உள்ள சாக்கடை கால்வாய்க்கு செல்ல தற்காலிக ஏற்பாடாக சுகாதாரத்துறை கால்வாய் தோண்டி கழிவு நீரை திருப்பினர்.
அதிகாரிகள் கூறுகையில், 'ரோட்டில் சாக்கடை அமையும் இடத்தில் சிலர் ஆக்கிரமித்து கட்டங்களை எழுப்பி உள்ளனர்.
ஆக்கிரமிதுள்ள 27 கடைகளுக்கு நகராட்சி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் இடம் தரவில்லை என்றால் ஒரு வாரத்தில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றி சாக்கடை அமைக்கும் பணி தொடர உள்ளோம், என்றனர்.